Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கமலைக் கலாய்த்த குஷ்பூ!

30 ஆக, 2015 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Kamalhassan-in-Simply-kushboo-program

குஷ்பூ இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் படங்களில் அவருக்கு பெரும்பாலும் இரவல் குரல்தான். டிவியில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தபிறகுதான் அவரது அசல் குரல் ரசிகர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. ஏற்கெனவே ஜாக்பாட் போல டிவியில் நிகழ்ச்சிகளில் வந்தாலும் இப்போது ஜி தமிழ் டிவியில் சிம்ப்ளி குஷ்பூ எனத் தெரிந்த பிரபலங்கள் தெரியாத சுவாரஸ்யங்கள் கொண்ட நிகழ்ச்சியை நடத்துகிறார். அண்மையில் கமலைப் பங்கேற்க வைத்துக் கலகலப்பாக்கினார்.


நிகழ்ச்சியினை வெறும் பேட்டி மாதிரி இல்லாமல் பலவித சுவாரஸ்ய தொகுப்பாக மாற்றியிருந்தது ரசிக்க வைத்தது.


கமலிடம் நடிகைகளின் உதடுகளை மட்டும் காட்டி இது யார் உதடு என்று கண்டு பிடிக்கச் சொன்னார். ஆண்ட்ரியா, வசுந்தரா, கௌதமி, ராணிமுகர்ஜி போன்று பலரது உதடுகளைக் காட்டி இது யாருடையது என்று கேட்டபோது கமல் சரியாகச் சொன்னார். இந்த வாயைப் பார்த்து நாளாகி விட்டதே. இது சட்டென்று தெரியவில்லை என்று அதற்கு ஜாலியாக கமல் கமெண்ட்டும் அடித்தார்.ஆண்ட்ரியா உதடு வந்த போது தெரியவில்லை என்றதுதான் நம்ப முடியவில்லை.. சில போட்டோக்களைக் காட்டி அது தொடர்பான தகவல்களைக் கேட்ட போது விதவித அனுபவங்களைக் கொட்டினார். கமலின் பதில்கள் பலவற்றில் தெரிந்தது அடக்கம். நடிப்பதில் சிரமமான கேரக்டர் எது என்றபோது " நான் கமல்ஹாசனாக நடிப்பதைத்தான். சிரமமாக உணர்கிறேன். நீங்கள் எல்லாம் என்னைப்பற்றி ஏதேதோ நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதை ஏமாற்றாதபடி நான் கமல்ஹாசனாக நடிப்பதைத்தான். சிரமமாக உணர்கிறேன் " என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in