Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சரவணன் மீனாட்சியில் ஆபாச வசனங்கள் நீக்கப்படுகிறதாம்!

28 ஜூலை, 2015 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Vulgar-dialogues-removed-from-Saravanan---Meenakshi-serial

விஜய் தொலைக்காட்சியில் 2011ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் சரவணன் மீனாட்சி. மற்ற சேனல்களெல்லாம் கணவன் மனைவி, மாமியார் மருமகள் பிரச்சினைகளை மையமாக வைத்து சீரியல்கள் பண்ணி வரும் நிலையில், விஜய் சேனலில் மட்டும் காதல் கதையில் இந்த சீரியலை தயாரித்து வழங்கி வந்தனர்.


இரண்டு சீசன்களாக பிரிக்கப்பட்ட இந்த தொடரில் முதல் பகுதியில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா இருவரும் காதலர்களாக நடித்தனர். அவர்களது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதோடு அந்த சீரியலில் இயல்பான காதலர்களாக நடித்த அவர்களுக்கிடையேயும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர்.


பின்னர் இரண்டாவது சீசனில் ரக்ஷிதா-வெற்றி நடித்தனர். ஆனால் முதல் பாத்திற்கு இருந்த பெயர் இவர்கள் நடிப்புக்கு கிடைக்கவில்லை. ஆனபோதும் பழைய பெயரைக்கொண்டே இப்போது வரை நகர்த்தி வருகின்றனர். ஆனால், இன்னும் ஓரிரு மாதத்தோடு சரவணன் மீனாட்சி முற்று பெறுகிறது.


இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வில்லன் பேசும் சில டயலாக்குகள் ஆபாசமாக இடம்பெற்று வருகிறது. இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பதால் அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் நேயர்களே முகம்சுழிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு இணையதளங்களில் எதிர்ப்புகள் எழுந்ததால், தற்போது புதிதாக படமாக்கப்படும் எபிசோடுகளில் ஆபாச வசனங்கள் இல்லாத வகையில் டயலாக் எழுதி வருகிறார்களாம். அதனால் இனிவரும் எபிசோடுகள் வழக்கம்போல் இருக்கும் என்று அந்த தொடரில் நடித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in