ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வி.யின் புகழ்பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. பல பிரிவின் கீழ் பல சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பங்கேற்ற சிவகார்த்திகேயன். மா.பா.கா, ஆனந்த் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் திரைப்பட நட்சத்திரங்கள் ஆகிவிட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது கலக்க போவது யாரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், சென்னை நகரங்களில் ஆடிசன் நடத்தி 50 பேரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு எபிசோடும் பலத்த போட்டியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். வெறும் மிமிக்ரி போட்டியாக இல்லாமல் பல வடிவங்களில் காமெடி திறமையை வெளிப்படுத்துகிற நிகழ்ச்சியாக இது இருக்கும். கடைசியாக இறுதிப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட இருகிறது. இந்த சீசனிலும் பல சிவகார்த்திகேயன்கள், ரோபோ சங்கர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டி.வியில் வருகிற 26ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக சேனல் நிர்வாகம் பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது.