தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசைக் கலைஞருமான அனுராதா ஸ்ரீராம், தனது கணவர் ஸ்ரீராமுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சியில் எல்லாமே சங்கீதம்தான் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வியாழக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை புதுமையான கான்செப்ட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை 125 எபிசோட்களை நிறைவு செய்திருக்கிறது எல்லாமே சங்கீதம் நிகழ்ச்சி.
இதுவரை பல தலைப்புகளில் இதை நடத்தியவர் கடைசியா மழையை மையமாக வைத்து நடத்தினார். அதாவது மழை தொடர்பான சாஸ்திரிய சங்கீத பாடல்கள், திரைப்பட பாடல்களை கொண்ட நிகழ்ச்சி. அடுதுது வருகிற 20ந் தேதி முதல் தாய்மையை மையாக கொண்ட பாடல்களை கொண்ட நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இதற்கு தாய்மை பயணம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். தாலாட்டு ஒவ்வொரு இசை வடிவத்திலும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது. திரைப்பட தலாட்டு பாடல்கள் எப்படி என்பதாக இந்த நிகழ்ச்சி அமையும். பொதிகையில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சியில் எல்லமே சங்கீதம்தான் நிகழ்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.