அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தமிழ் டி.வி.சேனல்கள் இன்னும் மாமியார் மருமகள் சண்டை, கூட்டுக்குடும்ப குத்துவெட்டுக்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் மலையாள சேனல்கள் புதுமையான கதைகளை தேடி தேடி தொடராக ஒளிபரப்புகிறது. சினிமாவில் டாப் ஸ்டார் படங்ளுக்கு ஓப்பனிங் கிடைப்பதைப்போல மலையாள சேனல் மனோரமாவில் ஒளிபரப்பாக தொடங்கிய மாயமோகினி என்ற தொடருக்கு செம ஓப்பனிங் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. காரணம் அதன் கதை.
யாமினி பாய் என்ற ஒரு வில்லியால் ஊர்மிளா என்ற அப்பாவி பெண்ணின் குடும்பம் நாசமாகிறது. அவரின் இரு தங்கைகளும் ஆபத்தில் சிக்குகிறார்கள். ஒரு பெண்ணால் பணபலம், அதிகார பலம், ஆள்பலம் மிக்க தாதாவான யாமினி பாயை எதிர்த்து போராடி ஜெயிக்க முடியாது. இதனால் தன்னை உன்னி கிருஷ்ணன் என்ற ஆணாக மாற்றிக் கொண்டு எப்படி அவர் தன் தங்கைகளை காப்பாற்றுகிறார், யாமினி பாயை பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. அப்பாவி பெண், வீரமான பெண் என்கிற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் அல்தரா.
சீரியலில் அவர் போலீஸ், வக்கீல், டாக்டர் என விதமான ஆண் கெட்அப்களில் வருகிறார். அவரை காதலிப்பவராக தினேஷ் பணிக்கர் நடிக்கிறார். ஏற்கெனவே வேட்டம்மா, நொம்பரபூவு, பாமினி தோற்காரில்லா, அம்மா அம்மாயிம்மா போன்ற பெண்களை மையமாக கொண்ட தொடர்களை இயக்கிய பிரசாத் நூநாடு இதனை இயக்குகிறார்.