Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டவுட்டு செந்திலின் புதுசு கண்ணா புதுசு!

30 ஜூன், 2015 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Puthusu-Kanna-Puthusu-by-Doubt-Senthil

ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட்டு நிகழ்ச்சி முற்று பெற்றுவிட்டதால், அதையடுத்து அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற திண்டுக்கல் சரவணன் பர்ஹர் டு பழைய சோறு என்றொரு நிகழ்ச்சியை வழங்குகிறார். அதேபோல் அதே நிகழ்ச்சியில்இடம் பெற்ற டவுட்டு செந்தில் புதுசு கண்ணா புதுசு என்றொரு புதுமையான நிகழ்ச்சியை வழங்குகிறார்.


இதுபற்றி டவுட்டு செந்தில் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட்டுக்கு பிறகு அடுத்த நிகழ்ச்சிக்காக 3 ஸ்கிரிப்ட்ட சேனல்ல கொடுத்தேன். அதுல ஒரு புரோகிராம ஓகே பண்ணியிருக்காங்க. முந்திய நிகழ்ச்சியை பண்ணின மாதிரி நானும், திண்டுக்கல சரவணனும் மீண்டும் சேர்ந்து பண்ணினா, பழைய புரோக்கிராமையே நினைவுபடுத்துற மாதிரி இருக்கும் என்பதால் ரெண்டு பேருமே வெவ்வேறு நிகழ்ச்சி பண்றோம்.


நான் புதுசு கண்ணா புதுசு என்ற பெயரில் முற்றிலும் புதுமையான ஒரு நிகழ்ச்சி பண்றேன். அதுக்கான படப்பிடிப்பு நடந்து எடிட்டிங் வேலைகள் போய்க்கிட்டிருக்கு ஜூலை மாதத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி ஆதித்யா சேனல்ல ஒளிபரப்பாகும்.


இந்த நிகழ்ச்சி பொதுமக்களை சந்தித்து கேள்வி கேட்பதுதான். அதாவது. கார் என்பதற்கு கார் என்று ஏற்கனவே பெயர் வைத்து விட்டனர். ஆனால் இப்போது நீங்கள் அதற்கு ஒரு பெயர் வைப்பதாக இருந்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?என்று பொதுமக்களிடம் கேட்பேன். அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதில் சொல்வார்கள். கல்லூரி, பள்ளி, குடும்பம் என அனைவரையும் சந்தித்து கேட்பேன்.


மேலும், டேடி எனக்கொரு டவுட்டுல அறிவுப்பூர்வமான விசயங்களை காமெடியா சொன்னோம். இந்த நிகழ்ச்சியில மக்களை யோசிக்க வைக்கப்போறோம். மொத்த பத்து கேள்விகள் கேட்டு, கடைசியில் ரொம்ப வித்தியாசமான பெயரை சொன்னவர்களை குறிப்பிட்டு சொல்வோம். மேலும், பத்து கேள்விகளும், பதிலும் ஒரே எபிசோடாக வராது. டேடி எனக்கொரு டவுட் மாதிரி பிட்டு பிட்டாக அவ்வப்போது வரும் என்கிறார் டவுட்டு செந்தில்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in