பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிள்ளை நிலா சீரியலில் ஹேமா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா பத்மினி. கேரளாவைச் சேர்ந்தவரான இவர், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே, தமிழ் சினிமாவில், புலி வேசம், அய்யன், காசேதான் கடவுளடா, விளையாடவா என பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், இப்படி பல படங்களில் நடித்தபோதும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்காத ரீச், இப்போது நடித்து வரும் பிள்ளை நிலா சீரியலில் கிடைத்து வருகிறதாம். அவர் எங்காவது பொதுமக்கள் கூடும் பகுதிக்கு சென்றால், அதோ பிள்ளை நிலா ஹேமா என்கிறார்களாம். அதோடு, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று நினைத்து பாசத்துடன் பழகுகிறார்களாம்.
அதனால், சினிமாவில் கிடைக்காத பெயரும், புகழும் சின்னத்திரையில்தான் கிடைக்கிறது எனறு கூறும் திவ்யா பத்மினிக்கு, இப்போதும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம். ஆனால், அவருக்குத்தான் சினிமாவில் நடிப்பதில் விருப்பம் இல்லையாம். அதனால் தேடிச்செல்லும் வாய்ப்புகளைகூட திருப்பி அனுப்பி வருகிறாராம் திவ்யா பத்மினி.
மேலும், தற்போது தமிழில் மட்டுமின்றி, தனது தாய்மொழியான மலையாள சீரியல்களிலும் நடித்து வருவதாக கூறும் அவர், சினிமாவில் அவுட்டோர் செல்ல வேண்டும், கிளாமராக நடிக்க வேண்டும் என்று பல பிரச்சினைகள் இருக்கும். ஆனால் டிவியில் அப்படி எந்த பிரச்சினையும் இல்லை. அலுவலகம் சென்று வருவதுபோல் உள்ளது. அதனால் ஆயுசுக்கும் சின்னத்திரை நடிகையாக இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் திவ்யாபத்மினி.