ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரைகளில் பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் ரம்யா. சில சீரியல்களிலும், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சினிமா உலகில் நடைபெறும் ஆடியோ விழாக்களிலும் அவர் தொகுப்பாளினியாக பங்கேற்று வந்தார்.
ஆனால், சமீபகாலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருக்கும் ரம்யாவை, சினிமா ஆடியோ விழாக்களில் காண முடிவதில்லை. அதேசமயம், நீலிமாராணி, அஞ்சனா உள்ளிட்ட சேனல் தொகுப்பாளிகளிகள் சினிமா நிகழ்ச்சிகள் பங்கேற்று வருகிறார்கள்.
இப்படி திடீரென்று ரம்யாவை ஆடியோ விழாக்களுககு வராமல் போனதற்கு காரணம், ஆடியோ விழாக்களில் தொகுத்து வழங்க தரும் தொகை மிகக்குறைவாக இருப்பதாக சொல்லி ரம்யாவை அவரது கணவர் தடுத்து நிறுத்தி விட்டாராம். அதன்காரணமாகவே அவர் இப்போது விஜய் தொலைக்காட்சியில் மட்டுமே தொகுப்பாளினியாக இருந்து வருகிறாராம்.