ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
* ஒரு காலத்தில் சின்னத்திரையில கோலங்கள் போட்ட தெய்வ யானை நடிகை. இப்போது நிதி பிரச்னையில் இருக்கிறார். அதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவு பண்ணியிருக்காராம். ஆனால் சின்னத்திரை இயக்குனர்களோ டைட்டில் ரோல் இல்லை வேறு கேரக்டரில் நடிக்கிறீங்களான்னு கேட்கிறார்களாம். இதனால் தீவிர யோசனையில் இருக்கிறார் நடிகை.
*காப்பி கொடுத்துக் கொண்டே பேட்டி எடுக்கும் தொகுப்பாளினி தற்போது அந்த நிகழ்ச்சிக்கு விடுப்பு எடுத்திருக்கிறார்.
* சின்னத்திரையில் நடிக்கும் எல்லா நடிகைகளுக்குமே பெரிய திரையில் நடிக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் சின்னத்திரையிலிருந்து செல்லும் நடிகைகளை பெரிய திரையினர் மதிப்பதே இல்லையாம். அதோடு சம்பளமும் குறைவுதானாம். இதனால் பலர் சீரியலே போதும் சினிமா வேண்டாமுன்னு முடிவெடுத்திருக்காங்களாம்.
*சின்னத்திரை நடிகைகள் பலரும் சைடு பிசினசாக ஏதாவது ஒன்றை ஆரம்பித்து விடுகிறார்களாம். தங்களது சின்னத்திரை செல்வாக்கை வைத்து வியாபாரத்தை பெருக்குறாங்களாம். ஒரு முன்னணி நடிகை எல்.ஐ.சி ஏஜெண்டாகவே இருக்கிறாராம். யாரவாது ரசிகர்கள் போனை போட்டு வழிந்தால் அப்படியே கொக்கி போட்டு பாலிசி எடுக்க வைத்து விடுறாராம்.
* கோடை வெயில் கொளுத்துவதால் நாட்டாமை நடிகர் மனைவி இரட்டை வேடத்தில் நடிக்கும் சீரியலின் கதையை கொடைக்கானலுக்கு திருப்பிவிட்டு மொத்த டீமும் கிளம்பி போய்விட்டதாம். பகலில் ஷூட்டிங், இரவில் கொண்டாட்டம் என செம ரவுண்டு கட்டுறாங்களாம்.