இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஸ்வேதா. சில ஆண்டுகள் பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிவிட்டு அதன் பிறகு சின்னத்திரை நடிகையானார். புதுக்கவிதை, ரோமாபுரிப் பாண்டியன் தொடர்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஸ்வேதாவுக்கு சினிமாதான் நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் விருத்தாச்சலம் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ரத்தன் கணபதி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் விருதகிரி என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். கிராமத்து பின்னணி கொண்ட கதையில் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஸ்வேதா. "சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் நான் நடிக்கும் கேரக்டர் பேசப்பட வேண்டும் என்று விரும்புவேன். அந்த வகையில் விருதாச்சலம் கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கிராமத்து டீச்சர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த டீச்சராகவே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. குறைந்த படங்களில் நடித்தாலும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்கிறார் ஸ்வேதா.