விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்த அனேகன் படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்தது. கே.வி.ஆனந்த் இயக்கினார். கடந்த பிப்ரவரி 13ந் தேதி ஒளிபரப்பான இந்தப் படம் சமீபத்தில் 50வது நாளையும் கொண்டாடியது. சில தியேட்டர்களில் 100 நாட்கள் வரை ஓடும் சாத்தியக்கூறுகளும் உள்ளது.இந்த நிலையில் வருகிற 14ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு முன்னணி சேனலில் அனேகன் படம் ஒளிபரப்பாகிறது. இது தனுஷ் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 100 நாள் ஓடக்கூடிய படத்தை டி.வியில் ஒளிபரப்பி அதனை கெடுக்கிறார்கள். என்று தனுஷிடம் போனிலும், டுவிட்டரிலும் கோபத்தை கொட்டி வருகிறார்கள். "படம் ஹிட் என்பதுதான் நமக்கு முக்கியம். தயாரிப்பாளருக்கும், சேனலுக்கும் உள்ள ஒப்பந்தம் பற்றி எனக்குத் தெரியாது. அது தயாரிப்பாளரின் உரிமை. படம் எல்லா மக்களையும் போய் சேருகிறது என்று சந்தோஷப்படுவோம்" என்று கூறியிருக்கிறார் தனுஷ்.