துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
* ஒரே ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சி மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் ஜம்பாகியிருக்கிறது வெற்றிச் சேனல். கிரிக்கெட் ஒளிபரப்பாகும்போதெல்லாம் ரோட்டில்கூட ஆள் நடமாட்டம் இல்லாமல் வெற்றி சேனல் முன் உட்கார்ந்து விடுகிறார்கள் மக்கள். இதனால் கலக்கத்தில் இருக்கிறது மற்ற சேனல்கள்
* சினிமா தயாரிக்கிறவங்க சங்கம் ஒரு சேனலுக்கு பிரமாண்ட சினிமா நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து கொடுக்க முன்வந்திருக்கிறதாம். திரையுலகை திரட்டி இசையின் ஞானிக்கு தவுசண்ட் வாலா பட்டாசு வெடித்து அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறதாம் சங்கம்.
* திரைப்படங்களை வாங்காத சேலன்களுக்கு புதிய படத்தின் பாடல் மற்றும் காட்சிகளை கொடுக்க கூடாது என்கிற முடிவை சினிமா தயாரிக்கிறவர்கள் சங்கம் உறுதியாக எடுக்க எடுக்கிறதாம். இதனால் சின்ன சேனல்கள் சங்கத்தை அணுகி உள்ளனர். உங்க சக்திக்கு ஏற்ற மாதிரி சின்ன படங்களை சின்ன தொகை கொடுத்து வாங்குங்க என்று வழிகாட்டியிருக்கிறார்களாம்.
* உச்ச நடிகரின் பட பிரச்னையில் விநியோகஸ்தர்கள் பக்கம் நிற்கிறதாம் அந்த சேனல். அவர்களுக்கு பணம் கிடைத்தால் சேனல் உரிம தொகையை நாமும் குறைத்து விடலாம் என்பதால் இந்த சப்போர்ட்டாம்.
* உலக நாயகனின் வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை வாங்க இரண்டு சேனல்கள் கடும் போட்டி போடுகிறதாம். அதிக பணம் கொடுப்பவர்களுக்கு உரிமம் என்று சொல்லிவிட்டாராம் நாயகன்.