பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொரியன் டிராமாக்களில் யூ ஆர் பியூட்டிபுலுக்கு அடுத்த புகழ்பெற்ற தொடர் தி ஹேர்ஸ். கொரியன் டிராமக்களின் நம்பர் ஒண் நடிகர் லீ மின் ஹோவும், நம்பர் ஒண் நடிகை பார்க் கின் இயும் இணைந்து நடித்த டிராமா. உலகம் முழுவதும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட தொடர் இது. அதோடு அமெரிக்க நிறுவனம் தயாரித்த முதல் கொரியன் தொடரும் இதுதான்.
தற்போது இந்தத் தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 23ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கொரியாவைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரன் மகன் ஜேசன் அமெரிக்காவில் படிக்கிறார். அவருக்கு இன்னொரு கோடீஸ்வரரின் மகளை திருமணம் பேசி முடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜேசன் தன்னுடன் படிக்கும் ஏழை மாணவி ஜெனியை காதலிக்கிறார். படித்து முடித்து விட்டு இருவரும் நாடு திரும்பிய பிறகுதான் தெரிகிறது. ஜேனி சேசன் வீட்டு வேலைக்காரரின் மகள் என்பது. இவர்கள் காதலை பிரிக்க கோடீஸ்வர குடும்பம் சதி செய்வதும். அதனை முறியடித்து இருவரும் காதலில் வெற்றி பெறுவதும்தான் கதை.