'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
ஐ படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்களைப் பார்த்தவர்கள் அந்த விழாவுக்கு செல்ல முடியாமல் போனதை எண்ணி வருத்தப்பட்டிருப்பார்கள். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெற்ற ஐ இசைவெளியீட்டுவிழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், எமி ஜாக்சன், அனிருத், அமலா பால், இயக்குநர் எ.எல் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த பிரம்மாண்டமான ஐ படத்தின் ஆடியோ விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, அனிருத் பாடிய பாடல், சிங்க முகத்தோற்றத்துடனான விக்ரம், எமி ஜாக்சனுடன் ஆடிய என்னோடு நீ இருந்தால்... பாடல் நடனம், பாடி பில்டர்களின் வித்தியாசமான நிகழ்ச்சி, ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ஐ படம் உருவான விதம் குறித்த வீடியோ என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த விழாவுக்கு வந்த ரசிகர்களை பரவசப்படுத்திய இதை எல்லாம் காண முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்படுகிறவர்களுக்கு இதே ஒரு குட்நியூஸ்..!
ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை சில கோடிகள் கொடுத்து வாங்கி உள்ள தனியார் டிவி, அதை வரும் அக்டோபர் 3ஆம் தேதி அதாவது ஆயுதபூஜை அன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.
மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!