தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை என பிசியாக இருக்கிறார் கங்கா செங்குட்டுவன். ஆனால் அவருக்கோ சிறந்த ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம், கனவு. காரணம் சென்னை நிப்ஃட் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் நான் எதிர்பாராமல் கிடைத்தவை. ஆனால் எனது லட்சியம் ஆடை வடிவமைப்பாளராவதுதான். அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழைய முடியாத நிப்ஃடில் படிச்சு முடிச்சேன். சும்மா டைம் பாசுக்காக டி.விக்கு வந்தேன். அப்படியே இங்கே செட் ஆயிடுச்சு தொகுப்பாளினியாக இருக்கிறப்போ சுதந்திரம் இருந்தது. நடிகையான பிறகு சுதந்திரம் இல்லை டைரக்டர் சொல்வதை செய்ய வேண்டும்.
இப்போது எனது கவனம் பேஷன் டிசைனிங் பக்கம் திரும்பியிருக்கிறது. இப்போதும் சத்தமே இல்லாமல் சில சினிமா பேஷன் டிசைனர்களுக்கு உதவியாக இருந்து வருகிறேன். விரைவிலேயே "ஆடைவடிமைப்பு கங்கா" என்று வெள்ளித்திரை டைட்டில் கார்டில் வரும். என்கிறார் கங்கா.