ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குறைந்த செலவில் நிறைவான நிகழ்ச்சி, நிறைவான வருமானம் பெற வேண்டுமா அதற்கு ஒரே வழி சமையல் நிகழ்ச்சிதான். ஒரு கிச்சன் செட்டு, நான்கைந்து காய்கறிகள் கொஞ்சம் எண்ணை உப்பு, மிளகாய், ஒரு ஸ்டவ் அடுப்பு, சமைக்க தெரிஞ்ச ஒருவர், அதை தொகுக்க அழகான தொகுப்பாளினி, ஒரு கேமராமேன், ஒரு லைட்மேன் இருந்தால் சமையல் புரோக்ராம் ரெடி.
இதிலும் வித்தியாசம் காட்ட நேயர்களின் வீட்டுக்கே சென்று அவர்கள் சமைப்பதை காட்டினார்கள். ஊர் ஊராக சென்று அந்தந்த ஊர் சமையலை நிகழ்ச்சியாக்கினார்கள். சின்னத்தரை நடிகர் நடிகைகளை கொண்டு சமையல் போட்டி நடத்தினார்கள். ஊர் ஊருக்கு ஓட்டலுக்குள் நுழைந்து அந்த ஓட்டலின் ஸ்பெஷல் அயிட்டங்களை காட்டினார்கள். இப்படி விதவிதமாக சமையல் புரோக்கிராம் செய்தார்கள். கிராமத்து கிழவிகளை அழைத்து வந்து பாட்டி சமையல், ஆச்சி சமையல் என்றார்கள். இப்படி சமையல் நிகழ்ச்சியை வரிந்து கட்டிக் கொண்டு தயாரிக்கிறார்கள்.
இதற்கு காரணம் குறைந்த செலவில் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சியை மதிய வேளையில் ஒளிபரப்பினால் பெண்கள் ஆர்வத்துடன் உட்கார்ந்து பார்க்கிறார்கள். சமையல் தொடர்புடைய மசாலாபொடி, சமையல் எண்ணை, மிக்சி, குக்கர் விளம்பரங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது. அதனால்தான் சமையல் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
உங்கள் கிச்சன் எங்கள் செஃப், கிச்சன் கில்லாடிகள், அஞ்சரைப்பெட்டி, அறுசுவை இது தனி சுவை, ஆரோக்கிய சமையல், நீங்களும் சமைக்கலாம், சுவையோ சுவை, அறுஞ்சுவை அடுக்ககம், நம் உணவு நமக்கு மருந்து, எங்கேயும் சமையல், நளபாகம் இதெல்லாம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சில சமையல் நிகழ்ச்சிகளின் பெயர்கள்.
தமிழ் நேயர்களின் சமையல் நிகழ்ச்சி ஆர்வத்தை புரிந்து கொண்டு சில ஆங்கில சேனல்கள் கூட புகழ்பெற்ற மாஸ்டர் செஃப், ஸட்ரீட் புட் அரவுண்ட் தி வோர்ல்ட் போன்ற நிகழ்ச்சிகளை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.