தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் அதன் விருது வழங்கும் விழா ஒளிபரப்பானது. அதில் விஜய்க்கு பெஸ்ட் எண்டர்டெய்னர் விருது வழங்கு வைபவம் ஹெலைட்டாக இருந்தது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாக இன்னொரு தொலைக்காட்சியில் அஜீத் நடித்த வீரம் படம் ஒளிபரப்பானது. இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் தனித்தனியாக டுவிட்டர் கணக்கு தொடங்கி விஜய் நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்த்தார்களா? வீரம் படத்தை பார்த்தார்களா என்ற கணிப்பை நடத்தினார்கள். இருவரும் மாறி மாறி எங்கள் ஹீரோக்குத்தான் மவுசு என்று கமெண்டுகளை தட்டிவிட்டார்கள்.
தற்போது இதன் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இரு நிகழ்ச்சிகளிலும் நடத்திய கணக்கெடுப்பில் சென்னை மண்டலத்தில் வீரம் படத்திற்கு 11 புள்ளிகளும், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு 10 புள்ளிகளும் கிடைத்தது. கிராமங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு முழுமைக்குமான டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் நிகழ்ச்சிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 9 புள்ளிகளும் கிடைத்துள்ளது. எப்படியோ இரு தரப்பு ரசிகர்களும் திருப்திபட்டுக் கொண்டுவிட்டார்கள்.