தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
சினிமா நட்சத்திரங்கள் மோதும் சிசிஎல் கிரிக்கெட் போன்று சின்னத்திரை நடிகர்கள் மோதும் கிரிக்கெட் லீக் போட்டிகள் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சின்னத்திரை கிரிக்கெட் அணிக்கு சென்னை பிரேவ் பவுன்சர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் பரத், மொக்க மகி. ஸ்ரவன், ஆதித்யா, பாலா, கோபி உள்ளட 16 நடிகர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
"எங்கள் அணி இப்போது கடுமையான பயிற்சியில் இருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் ஏற்கெனவே சின்னத்திரை கிரிக்கெட் டீம் இருக்கிறது. நாங்கள் இப்போதுதான் அணியை துவக்கி இருக்கிறோம். இனி மற்ற மாநில சின்னத்திரை அணியுடன் விளையாடி ஜெயிப்போம். வெளிநாடுகளுக்கும் சென்று விளையாடுவோம். சென்னை ரெய்னோஸ் என்ற சினிமா நட்சத்திர அணி போன்று எங்கள் அணியும் புகழ் பெறும், விரைவில் 4 மாநில சின்னத்திரை நடிகர்கள் மோதும் லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது" என்கிறார் கேப்டன் பரத்.