நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சமீபகாலமா சின்னத்திரையில் கேம் ஷோக்கள் அதிகரித்திருக்கிறது. சினிமா, சீரியலுக்கு அடுத்தபடியாக கேம் ஷோக்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அதனால் விதவிதமான கேம் ஷோக்களை உருவாக்க சேனல்கள் தனி டீம்களை அமைத்திருக்கிறார்கள். அந்த டீமும் சினிமா மாதிரி ரூம் போட்டு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி யோசித்து தற்போது ஹிட்டடித்திருக்கும் ஷோ ஒல்லி பெல்லி. ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு கேமா நடக்கிற காரியமா என்றவர்கள் இப்போது ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். அதனால் இப்படி கோக்குமாக்கான கேம்களை உருவாக்க தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி நடத்தி வரும் சேனல்கள்கூட ஒரு கட்டத்தில் இவைகள் மக்களுக்கு போரடித்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அடுத்தடுத்து நிகழ்ச்சி பற்றிய ஐடியாக்களை சேகரித்து வருகிறார்கள்.
புதுமையான நிகழ்ச்சிகளுக்கு கான்செப்ட் தருகிறவர்களுக்கு கணிசமாக பணத்தையும் அள்ளித் தருகிறார்கள். சில முன்னணி சேனல்கள் தாங்களாக எதையும் யோசிக்க மாட்டார்கள். பிறர் வடிவமைத்த நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து விடுவார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர்களையும் கூடுதலாக சம்பளம் தருகிறேன் என்று ஆசை காட்டி அள்ளிக்கொண்டு போவார்கள். நிகழ்ச்சி டல் அடித்தும் வெளியே தள்ளிவிடுவார்கள். இதையும் கவனத்தில் கொண்டு இனி நிகழ்ச்சிக்கான கான்செப்ட் உருவானதுமே அதனை காப்பிரைட் சட்டத்தின் படி பதிவு செய்துவிடுகிறார்கள்.