ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜா வரும் சிம்ரன் மீண்டும் சிக்கென்று மாறிவிட்டார். திருமணத்திற்கு பின் சதை போட்டு ஆளே மாறியிருந்த சிம்ரன், கடினமான உடற்பயிற்சிக்கு பின் மீண்டும் சிக்கென தனது உடலை மாற்றிவிட்டார். ஜீ தமிழ் சேனலில் அவர் நடத்தும் டான்ஸ் நிகழ்ச்சி குறித்து அவர் கூறும்போது, சேனல்ல டான்ஸ் ஷோ பண்ண ரொம்ப ஆசையா இருந்தேன். கான்செப்ட் தயார் பண்ணி, ஜீ தமிழ் புரொடக்ஷன் டிவிஷனுக்கு போனேன். உடனே அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. நாங்க புதுசா தொடங்கியிருக்க எரி ஜெம் புரொடக்ஷன் கம்பெனிதான் நிகழ்ச்சியைத் தயாரிக்குது. என் கணவர் தீபக் தான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில என்னுடன் சின்னி பிரகாஷ் மாஸ்டரும் ஜட்ஜா வர்றாங்க. அவரது அனுபவம் தான் நிகழ்ச்சியை கலகலப்பாக்குது என்று கூறினார்.