‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய் டி.வி.,யில் சனிக்கிழமைதோறும் இரவு 7.30 ஒளிபரப்பாகி வரும் புதுமையான நிகழ்ச்சி நம்ம வீட்டு கல்யாணம். இதில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் திருமண நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பிரபலங்களின் திருமணங்கள் எப்படி நடைப்பெற்றது? அதற்கான முன்னேற்பாடுகள், அவை நடந்த முறை, சாஸ்திர சம்பிரதாயங்கள் முதல் திருமணத்திற்கு பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் நேயர்களுக்காக, பிரத்தியேகமாக சேகரித்து வழங்குகின்றனர். திருமணம் பற்றி மணமகன், மணமகள் மற்றுமல்லாது அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். பிரபலங்களின் திருமண பந்தத்தில் அவர்கள் அடைந்தது என்ன? என்னென்ன முரண்பாடுகளை அவை ஏற்படுத்தியுள்ளது, நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் தொடர்புகள் வலுவாகியுள்ளதா? அல்லது அதெற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனதா? போன்ற பல விஷயங்களை நேயர்களிடம் பிரபலங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் திருமண ஏற்பாடுகளில் நடக்கும் குளறுபடிகள் முதல், விளையாட்டு வைபவங்கள், நகைச்சுவை நிகழ்வுகள், மறக்க முடியாத அனுபவங்கள், இன்றைக்கு நினைத்தாலும் சிரிக்கக் கூடிய விஷயங்கள், மாப்பிள்ளை திருட்டுத்தனமாக மணப்பெண்ணை சந்தித்த அனுபவங்கள் என ஏராளமான தங்களது அனுபவங்களை பிரபலங்கள் மனம் திறந்து பேசுகிறார்கள்.