பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இமயம் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.’ ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்திய நாட்டு நடப்பை தரும் நிகழ்ச்சி இது. மத்திய, மாநில அரசியல் பிரச்னைகள், அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டங்கள், அவர்களின் சுவாரசிய அறிக்கைகள், உண்மையான போராட்டங்கள் என ஒன்று விடாமல் அத்தனை நிகழ்ச்சிகளும் நகைச்சுவை கலந்த குறும்புத்தனத்துடன் இந்த நிகழ்ச்சியில் அலசப்படுகிறது. அரசியல் மட்டுமின்றி சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் பாமரனுக்கும் போய்ச்சேரும் வகையில் சுவாரசியமாக விவரிக்கப்படுகிறது. இடையிடையே நிகழ்வுகளுக்கு ஏற்ற பழமொழிகளுடன் செய்திகள் விமர்சிக்கப்படுவது நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியம் கூட்டுவதாக அமைந்திருப்பது சிறப்பு. தணிகைவேலன்–சந்தியா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை டைரக்டர் சிவகுமார் இயக்குகிறார்.