சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பொதிகையில் ஏ.கே.கம்யூனிகேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய தொடர், கேளடி பெண்ணே..! பெண்களுக்கான மருத்துவ கல்வி விழிப்புணர்வு தொடரான இது, உயிர் யாரிடம், உங்கள் நினைவிற்கு, கேளுங்கள் சொல்கிறேன் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
கணவன் மனைவிக்குள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை அலசுவது. இதோடு முக்கியமாக இன்றைக்கு பல பெண்கள் படிப்பு, வேலை, வாழ்க்கையில் வசதியாக காலூன்றும் லட்சியம் ஆகிய காரணங்களால் திருமணத்தையும், திருமணத்திற்கு பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வதையும் தள்ளிப் போடுகிறார்கள்? இது நல்லதா? தவறா? இதனைப் பற்றி முழுமையாகவும், முழுவதுமாகவும் அலசுகிறது இந்த புதிய பகுதி.