'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"கடல் படத்தில், கவுதம் கார்த்திக்குடன், சமந்தா தான், ஹீரோயினாக நடிப்பதற்கு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால், சமந்தாவுக்கு, அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. இந்நிலையில், சமீபத்தில், இதுகுறித்து, "டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா, "கடல் பட ஹீரோ, கவுதம் கார்த்திக்கை, நான் நேரில் பார்த்தது இல்லை. முன்னதாக, இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை
ஒப்பந்தம் செய்திருந்தனர். அப்போது, கவுதம், இப்படித் தான் இருப்பார் என, என் மனக் கோட்டைக்குள் ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்தேன். இப்போது, அவரது புகைப்படங்களை பார்த்தேன். நான், முன்பு எப்படி நினைத்திருந்தேனோ, அதே மாதிரி இருக்கிறார் என, தெரிவித்துள்ளார், சமந்தா.