அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
"அட்டக்கத்தி படத்தில், அலுங்காமல், குலுங்காமல் நடித்து, அட்டை பூச்சியாய் ரசிகர்களின் இதயங்களில் ஒட்டிக் கொண்டவர் நந்திதா. பெங்களூரு பெண்ணான இவர், நடித்த முதல் படமே ஹிட் என்பதால், இயக்குனர்களும், படாதிபதிகளும் அவரை புக் செய்ய படையெடுத்தனர். இதனால், அரை டஜன் படங்களுக்கு மேல் நந்திதாதவுக்கு புக்காகிவிடும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, "நளனும் நந்தினியும், எதிர்நீச்சல் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்."என்ன காரணம் என்று அவரை கேட்டால்,"பல படங்கள் என்னை முற்றுகையிட்டது உண்மைதான். ஆனால், கிராமத்து கதாபாத்திரங்களுக்கே செட்டாகும் என்னை, பலர் நீச்சல் உடையில் நடிக்க கேட்டனர்.
அதில் உடன்பாடில்லை என்பதால், சில படங்களை தவிர்த்துவிட்டேன் என்று சொல்லும் நந்திதா, "கிளாமருக்கு ஏற்ற உடல்வாகு என்னிடம் இல்லை என, பகிரங்கமாக கூறுகிறார்.