சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! | காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்! | எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம் |
புதுடில்லி: திரைப்படங்களை, "டிவியில் ஒளிபரப்புவதற்கு, இனிமேல் சென்சார் போர்டு சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட் டாயமாக்கப்பட உள்ளது.தற்போது திரைப்படங்கள் எல்லாம், சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் அளித்த பின்னரே, திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களை, யு, யு.ஏ., ஏ மற்றும் எஸ் என்ற, நான்கு பிரிவுகளில் தரம் பிரித்து, சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி வருகிறது. தியேட்டரில் வெளியிடப்பட்ட படங்கள், "டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின்றன.கடந்தாண்டு, பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் திரையுலக வாழ்க்கையை சித்தரிக்கும், "டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம், தனியார், "டிவி ஒன்றில் ஒளிபரப்பாக இருந்த நிலையில், சர்ச்சை எழுந்தது. பின், அப்படத்தில் பல காட்சிகள் நீக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது.இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் எழாமல் இருக்க, "டிவியில் ஒளிபரப்புவதற்கு என, சென்சார் போர்டிடம் தனி சான்றிதழ் பெற வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகமும், மத்திய சென்சார் போர்டும், விரிவாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இது குறித்து, திரை உலகத்தினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் பற்றி, சினிமா தயாரிப்பாளர்கள் கூறுகையில், "திரையரங்கங்களில் திரையிடுவதற்காக ஒன்றும், "டிவி ஒளிபரப்புக்கு என்றும், தனித்தனியாக சென்சார் போர்டு சான்றிதழ் தரலாம் என்றனர்.