விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி பொங்கல் விடுமுறை நாளில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. கடந்த டிசம்பர் 29ம்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையில் முப்பதாயிரம் பார்வையாளர்கள், 300 தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை நடனக் கலைஞர்கள் இவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம் இசைவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினரோடு அமெரிக்காவை சேர்ந்த ஏழு பெண் இசைக் கலைஞர்கள் முதன்முறையாக டிரம்ஸ் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிஹரன், சித்ரா, கார்த்தி ,பென்னி தயால், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களை பாடினார்கள். பாடல்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல நடனங்களும் நிகழ்த்தப்பட்டது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜெயா டிவியில் வருகிற பொங்கல் விடுமுறை தினங்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.