Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாக்கியலட்சுமி சீரியல் மீது காவல்துறையில் புகார்!

02 ஜன, 2022 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Police-Report-on-Bhagya-Lakshmi-Serial

விஜய் டிவி ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சமீபத்தில் தொடரின் டிஆர்பியை கூட்டும் வகையில் சமகால பிரச்னையை கையில் எடுத்து பேசுகிறோம் என்ற பெயரில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து படமாக்கி வருகின்றனர். இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அண்மையில் ப்ரணிகா நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலின் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முகமது கோஷ் என்பவர் இது போன்ற காட்சிகளை சீரியலிலிருந்து நீக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில், 'பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகைகள்!புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஹாட் ... ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Venkatesh - Chennai,இந்தியா
10 ஜன, 2022 - 03:20 Report Abuse
Venkatesh Stop all these nonsense serials permanently which is not adding any value to our society, moreover it spoils the mind especially women whom sping most of their time in these worst serials which corrupts their original soft nature. Every serial episode is like a of poison which cumulatively eradicates ones original nature and it is a dangerous threat to each individual. Strict sensor board guidelines need to enforce on these ongoing serials too like the cinema movies.
Rate this:
JayaSeeli - madurai,இந்தியா
08 ஜன, 2022 - 10:58 Report Abuse
JayaSeeli இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை வீட்டில் வெளிப்படையாக பேச முடியாத நிலை தான் இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. இது போன்ற தொடரகள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தங்கள் பிரச்சனைகளை பெற்றோரிடம் தெரிவிக்கும் தைரியத்தை கொடுக்கும். Kindly do not hinder such eye-er series. Let us take the essence of the story and go ahead by-passing minor mistakes.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
08 ஜன, 2022 - 10:20 Report Abuse
madhavan rajan இவர் தமிழ் படத்தில் காட்டும் பல விஷயங்கள் தவறான முன் உதாரணத்தைக் காட்டி மக்களை கெடுக்கிறதே. அவைகளை எதிர்க்க வேண்டியதுதானே. ஹீரோவை ரவுடியாக காட்டுவது, அரசியல் கட்சிகள் கலாட்டா செய்வது, போலீசை முட்டாள்கள் போன்றும் ரவுடிகளிடம் அடிவாங்குவது போன்றும் காட்டுவது, போன்ற விஷயங்கள் சமூகத்திற்கு ஏற்புடையதா?
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
08 ஜன, 2022 - 08:50 Report Abuse
Bala Murugan தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகத் தான் காண்பித்தார்கள். கடைசியில் எந்த கருத்தை முன்வைத்து காண்பித்தார்கள் என்பதை யோசிக்க வேண்டும் - பிள்ளைகள் பள்ளியில் எந்த பிரச்சனை என்றாலும் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தெளிவாக சொல்லிவிட வேண்டும் எதையும் வீட்டில் உள்ளவர்களிடம் மறைக்க கூடாது தற்கொலை முற்றுப்புள்ளி இல்லை தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் பெற்றோர்கள் தான் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர். அதே சமயம் அந்த மாணவிகளின் பெயர் வெளிவந்து விடக்கூடாது என்றும் கவனமாக புகார் அளிக்கின்றனர். நாடகத்தில் நடந்த சிறு தவறு ஆசிரியரை காண்பிக்காமல் காட்சிகளை காண்பித்திருக்கலாம். அந்த ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்து கூப்பிட்டு போகும் பொது அந்த ஆசிரியர் நெடுந்தொடருக்காக முகத்தை காட்டிக்கொண்டு சர்வ சாதாரணமாக காவல் வண்டியில் ஏறுகிறார்.
Rate this:
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
07 ஜன, 2022 - 19:00 Report Abuse
Ravichandran Narayanaswamy அந்த கதையில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இந்த காலத்தில் பெற்றோர்கள் செல்போன் கேம்ஸ் ஆடக்கூடாது என்று கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கேட்டிருக்கிறோம். பாலியர்கள் குற்றத்திற்காக தற்கொலையை யாரும் நியாயப்படுத்தவில்லை-தவறு என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in