பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! |
ஜெயா டிவியில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஐயப்ப பக்தன் அழகனுக்கு மல்லிகா, சீதா என 2 மகள்கள். காட்டில் உள்ள ஒரு விசேஷ மூலிகையினால் எல்லோருக்கும் இலவச சிகிச்சை அளிக்கிறான். அழகன். அந்த அபூர்வ மூலிகையின் ரகசியத்தைப் பெற கேசவன் என்பவனும் மந்தாகினி என்ற அவனது தோழியும் சகல விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். முதல் கட்டமாக அழகனின் குழந்தைகள் இருவரையும் சித்ரவதை செய்கிறார்கள். வேதனை பொறுக்காத குழந்தைகளின் அழுகுரல் கேட்டு உடனடியாக ஐயப்பன் அவர்களுக்கு உதவினார் என்பது புராணம். தொடரை, ஸ்ரீசுப்பிரமணியம் என்டர்பிரசஸ்சுக்காக எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். கதை:சரவணன். வசனம்: கே.பி.அறிவானந்தம். ஹர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி, சஞ்சய், மீனாகுமாரி, கே.ஆர்.விஜயா, டில்லி கணேஷ், பிரவினா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் உண்டு. டைரக்டர் துளசிதாஸ் இயக்குகிறார்.