Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

எழுத்தாளரை கழற்றி விட்ட இயக்குனர்

19 டிச, 2012 - 14:08 IST
எழுத்தின் அளவு:

கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன், அயன், கோ படங்களின் கதை வசனகர்த்தாக்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சுபா. கதை விவாதம், திரைக்கதை அமைப்பு என அனைத்திலும் கே.வி.ஆனந்த்க்கு உதவி வந்தார்கள். ஆனால் இவர்கள் இணைந்து பணியாற்றிய மாற்றான் படம் தோல்வி அடைந்து விட்டது. இதற்கு எழுத்தாளர்களின் தவறான ஆலோசனைதான் என்று கே.வி.ஆனந்த் கருதுகிறாராம். இதனால் ஏழுத்தாளர் சுபாவை தன் குழுவிலிருந்து விலக்கி விட்டாராம். தற்போது கே.வி.ஆனந்த்க்காக ரஜினிக்காக ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறாராம். இதன் கதை விவாதத்திலும், ஆலோசனையிலும் சுபா இல்லை. அவர்களுக்கு பதிலாக அந்த டீமில் இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர் காணப்படுகிறார். "ரஜினிக்காக தயாராகி வரும் ஸ்கிரிப்ட் சூப்பர் போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரி. உலகையே உலுக்கும் ஒரு க்ரைம் சென்னையில் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க வரும் இண்டர்போல் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். அதனால்தான் க்ரைம் நாவல்களுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டை பிரபாகரை இயக்குனர் விவாதத்திற்கு அழைத்துள்ளார். மற்றபடி சுபா எங்கள் அணியில்தான் இருக்கிறார்" என்கிறார்கள். கே.வி.ஆனந்தின் நண்பர்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

paventhan - Tiruchi,இந்தியா
19 ஜன, 2013 - 10:53 Report Abuse
 paventhan எழுத்தாளர்கள் சுபாவின் திறமையை நிரூபிக்க "அயன்" படம் ஒன்றே போதுமானது. கே. வி. ஆனந்த் சார், மாற்றான் படம் கதை நல்ல கதை தான். இடைவேளை வரையிலும் நல்ல திரைக்கதை தான். ஆனால் இடைவேளைக்கு பிறகு படத்தில் நேட்டிவிட்டி குறைந்து இருந்தாலும், மக்களுக்கு புரியவைக்கிற படியாக காட்சிகள் இல்லை. அவசர அவசரமாக காட்சிகள் நகர்கிறது. என்ன செய்கிறார்கள்? யார் செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள்? ஒன்றுமே யாருக்கும் புரியவில்லை. இதற்கு உங்கள் டைரக்க்ஷனோ அல்லது எடிட்டரின் தேவை இல்லத இடத்தில் செய்த கட் தான் காரனமாக இருக்கும். பரபரப்பும் விறுவிறுப்பும், திரைக்கதையில் குறைந்தது 10 அல்லது 15 நிமிடத்துக்கு ஒரு திருப்புமுனை வைத்தால் தான் நன்றாக இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒரு திருப்பம் இருந்தால் அது பார்வையாளர்களுக்கு தேவையற்ற சோர்வை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரனம் மாற்றான் படம். இதே படத்தை இடைவேளைக்கு பிறகு வேறு கதை களம் வைத்து மறுபடியும் கூட ரிலீஸ் செய்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட். இது மாதிரி இரட்டையர்கள் படம் வந்ததே இல்லை தமிழில். உங்களுடன் சுபா இருந்தால் தான் நீங்கள் வெற்றிகரமான இயக்குனர். புரிந்துகொள்ளுங்கள். அயன் மற்றும் கோ வெற்றி பெற்றதில் 50 சதம் சுபாவின் திரைகதை மற்றும் கதைக்களம் தான் காரணம். So Don’t miss the companion of Mr. Suresh and Mr. Balakrishnan. You better take a movie with their Novel hero Narendhran and Vaijayanthi in an investigation thriller. It will be good. P.Paventhan
Rate this:
மீனம்பா - selam,இந்தியா
17 ஜன, 2013 - 16:23 Report Abuse
 மீனம்பா நிற்பதும் நடப்பதும் உன்செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே ...............தம்பி துள்ளாதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in