சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
தமிழ்நாட்டில் பஸ் நிலையங்களிலேயே வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கேயே படுத்து தூங்கி அங்குள்ள குளியலறை, கழிப்பிடங்களை பயன்படுத்தி, அங்கேயே பிழைப்பையும் பார்த்துக் கொள்வார்கள். இவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது "பெண் ஒன்று கண்டேன்". தலைப்பிலேயே படத்தின் கதையையும் காணமுடியும். பஸ் நிலையத்தில் வாழும் ஒரு இளைஞன் அங்கு வரும் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொள்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. ஜெ.வி.அஸ்வின்ராஜ், அனாமிகா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பெரும்பாலான கதை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் படம்பிடித்திருக்கிறார்கள். பிரபு தேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாசன் இயக்கி உள்ளார்.