சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
பொதுவாக இயக்குனர்கள் தங்கள் படத்தைப் பற்றி நம்பிக்கையுடன் கூறும் வார்த்தை "படம் பேசும்" என்பது. அதையே ஒரு படத்துக்கு தலைப்பாக்கி விட்டார்கள். "பை 2" என்ற படத்தை இயக்கியவர் ராகவா. இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் இருவர் மட்டுமே நடித்திருந்தனர். அந்தப் படம் தோல்வியடையவே ராகவாவுக்கு அதன் பிறகு படம் கிடைக்க வில்லை. இப்போது படம் பேசும் என்ற படத்தை இயக்கி வருகிறார். பி.வாசு மகன் சக்திதான் ஹீரோ, சங்கர் என்ற தெலுங்கு நடிகர் இன்னொரு ஹீரோ. பூர்ணா ஹீரோயின். தமிழ் தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். ஷாயாஜி ஷிண்டே, நிஷா கோத்தாரி என தெலுங்கு, தமிழ் நட்சத்திரங்கள் கலந்து நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் இப்போது எதுவும் பேச மாட்டாராம். ஏன் என்று கேட்டால் பட தலைப்பு மாதிரியே படம் பேசுமாம்.