சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் நடித்த, "காபர் சிங் படம், பரபரப்பாக ஓடி வசூலை குவித்தது. இந்த படத்தில், "பாக்கியலெட்சுமி என்ற கதாபாத்திரத்தில், கிராமத்து பெண்ணாக அவர் நடித்திருந்தார். இதனால், தெலுங்கு ரசிகர்கள் அவரை எங்கு பார்த்தாலும், "பாக்கியலெட்சுமி என்று தான், அன்புடன் அழைக்கின்றனராம். இதைத் தொடர்ந்து, தற்போது, "யெவடு என்ற, மற்றொரு படத்தில், நடிக்க, ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில், முந்தைய படத்தில் நடித்த கேரக்டருக்கு, முற்றிலும் மாறுபட்டதாக, "அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்கப் போகிறாராம். "பாக்கியலட்சுமி கேரக்டர் போன்றே, இந்த அல்ட்ரா மாடர்ன் கேரக்டரும், ஆந்திர ரசிகர்களை, பெரிதும் கவரும் என, நம்பிக்கை தெரிவித்துள்ள, ஸ்ருதி, "யெவடு படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படத்தில், முதலில் சமந்தா தான், நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் நடந்த மாற்றத்தால், சமந்தாவிடமிருந்து அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு கை மாறியுள்ளது.