மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் |
சமீபத்தில் ரிலீசான கும்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் பரதேசி படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளார் பாலா. பாலா இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் பரதேசி. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது. இம்மாதம் 21-ம் தேதியில் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் பாலா. ஆனால் அதற்கு முன்பு இம்மாதத்ததில் வெளியாகியுள்ள நீதானே என் பொன்வசந்தம், கும்கி ஆகிய படங்களின் ரிசல்ட்டை எதிர்பார்த்திருந்தார். ஒருவேளை படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் தனது படத்தை உடனடியாக களத்தில் இறக்கி விடும் ப்ளானில் இருந்தார்.
ஆனால் இப்போது கும்கி ரசிகர்களின் ஆதரவினை பெற்று ஓடிக்கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் பரதேசியை வெளியிட்டால் கும்கி கொண்டாட்டத்தில் நாம் காணாமல் போய் விடுவோம் என்று பதுங்கி விட்டார். அதோடு வருகிற 21-ந்தேதி சட்டம் ஒரு இருட்டறை, கள்ளத்துப்பாக்கி, சமர் ஆகிய படங்கள் தயார் நிலையில் இருக்க, தனது படத்தின் ரிலீசை ஜனவரி கடைசிக்கு மாற்றி விட்டார் பாலா.
பொய் சொன்னாலும் மெய்யா இருக்கிற மாதிரி சொல்லணும், Bala sir படத்தை திரையில் பார்க்க எவ்ளோ பேர் காத்திருக்காங்க தெரியுமா? இந்த நேரத்தில் பரதேசியை வெளியிட்டால் கும்கி கொண்டாட்டத்தில் நாம் காணாமல் போய் விடுவோம்... என்று சொல்வது உங்களுக்கே கொஞ்சம் overaa தெரியல? உண்மையான காரணம் தெரிந்தால் சொல்லவும் இல்லனா அமைதியாக இருந்தாலே போதும்.