Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எதிர்காலத்தில் சினிமா இயக்குவேன்! சாந்தினியின் சிறப்பு பேட்டி!!

Shanthinis special interviewசித்து பிளஸ்-2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சாந்தினி. எத்திராஜ் கல்லூரி மாணவி. தற்போது நான் ராஜாவாகப் போகிறேன் படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அவரது சிறப்பு பேட்டி...

* பாக்யராஜ் படத்தில் அறிமுகமாகியும் கொஞ்ச நாட்களாக ஆளையே காணோமே?

நான் எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சித்து பிளஸ்-2 வாய்ப்பு வந்தது. கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு படத்தில் நடித்தேன். அந்தப் படம் முடிந்த உடனேயே அடுத்து வந்த படம் ஆரியா சார் தயாரிப்பில் படித்துறை. எழுத்தாளர் சுகா சார் இயக்குனர். அந்தப் படத்தில் நடித்து முடித்த உடனே கல்லூரியில் இறுதி ஆண்டு வந்துவிட்டது. இறுதி ஆண்டில் லீவு தரமுடியாது. படிப்பா? நடிப்பா? என்று நீயே முடிவு செய்து கொள் என்று கல்லூரியில் கூறிவிட்டார்கள். அதனால் அதன் பிறகு வந்த வாய்ப்புகள் எதிலும் நடிக்க முடியாமல் போனது. அதுதான் சிறிய இடைவெளி வந்து விட்டது.

* படித்துறை படம் என்னாயிற்று?

அதான் எனக்கும் தெரியவில்லை. நல்ல அருமையான காதல் கதை. அந்தப் படம் வெளிவராதது எனக்கு பெரிய இழப்புதான். இருந்தாலும் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

* நான் ராஜாவாகப்போகிறேன் அனுபவம் எப்படி?

சட்டக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். நியாயத்துக்காக போராடும் வீரமான பெண் கேரக்டர். இப்படி ஒரு வாழ்க்கையை நிஜத்தில் வாழ வேண்டும் என்று நான் விரும்பியது உண்டு. அது சினிமாவில் நடந்திருக்கிறது.

* தெலுங்கு பக்கம் போனீர்களே?

ஆம்...! படித்துறை இடைவெளியை ஏற்படுத்தி விட்டதால் தமிழில் என்னை மறந்து விட்டார்கள். நானும் படித்து முடித்து விட்டேன். இனி நடிப்புதான் என்று முடிவு செய்த பிறகு தெலுங்கு வாய்ப்பு வந்தது. ராம்கோபால் வர்மா சாரின் உதவியாளர் இயக்கும் படம். காளிச்சரன் என்று பெயர். அதில் மலைவாசிப் பெண்ணாக நடிக்கிறேன். அந்தப் படம் தெலுங்கில் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்ற நம்புகிறேன்.

* விஸ்காம் படித்திருப்பதால் படம் இயக்கும் ஆசை இருக்கிறதா?


கண்டிப்பாக இருக்கு. இப்போதே நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். படிக்கும் காலத்தில் சில குறும் படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால் சினிமா இயக்க அனுபவம் போதாது. இன்னும் நிறைய கற்றுக் கொண்ட பிறகு சினிமா இயக்குவேன்.

* கிளாமராக நடிப்பீர்களா?


கதைக்கு தேவையான அளவுக்கு நடிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நானும் கண்டிப்பாக நடிப்பேன். நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் பாடல் காட்சிகளில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன்.

* அடுத்த படம்?


நிறைய கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். தவறான படங்களை தேர்வு செய்து தோற்றுப்போனவர்கள் பற்றி நிறையவே தெரியும். அதனால் எச்சரிக்கையாக இருக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் நல்ல படங்களில் மட்டும் நடிப்பேன்.

Tags »
Shanthini, special interview, சாந்தினி, சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (2)

selvam - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
2012-12-18 17:57:07 Report Abuse
selvam வாழ்துகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எல்.கோபால் - chidambaram,இந்தியா
2012-12-18 16:14:37 Report Abuse
 எல்.கோபால் வரவர பெண் இய்யக்குனர்கள் அதிகம் ஆய்ட்டாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in