Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கனவு கன்னியெல்லாம் ஆக வேண்டாம்! - நந்திதா

I dont want dream girl post says Nanditaநளனும் நந்தினியும் படத்திற்காக பாவாடை தாவணியில் மதுரையை சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. மதுரை அவுட்டோரில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில் "கும்முன்னு வருது... நம்ம ஊரு தேரு... தேருமேல வருகிற தேவதைய பாரு..." என்ற பாடலுக்கு ஹீரோ மைக்கேலுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்து "என்னங்க தமிழ்நாட்டு பொண்ணாவே மாறிட்டீங்க போல..." என்றால் தெத்துப்பல் தெரிய கலகலவென சிரிக்கிறார்.

"பெங்களூருக்கும் சென்னைக்கும் 8 மணிநேர டிராவல்தான். தமிழ் நல்லா பேசுவேன். பாவாடை தாவணி அம்சா ஷூட்டாகுது. அப்போ நான் தமிழ் பொண்ணுதானே. அட்டகத்தியில என்னை அழகுபடுத்தி பார்த்தீங்க. இப்போ நந்தினியா பார்க்கப்போறீங்க. மார்டன் பொண்ணாவே வாழ்துட்டோமே இப்படி ஒரு அழகான வாழ்க்கை இருக்குங்றத மதுரைக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். எந்த கிராமத்துக்கு போனாலும் திருஷ்டி சுத்தி இந்த தெத்துப்பல்லுதாம்மா உனக்கு அழகுன்னு சொல்றப்போ நெகிழ்ச்சியா இருக்கு. தமிழ் சினிமால நம்பர் ஒன் ஹீரோயின். கனவு கன்னியெல்லாம் ஆக வேணாம். உங்களோட பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தா போதுங்க" என்று சிரித்து வழியனுப்பிய படி அடுத்து ஷாட்டுக்கு எழுந்து போனார்.

Tags »
Nandita, நந்திதா,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in