தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
மைனா அமலாபாலின் நடிப்பு பேசப்படும் அளவுக்கு இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நார்மலான நடிகையாகத்தான் நடித்து வந்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிருதிவிராஜூடன் அவர் நடித்த கலர் ஆப் ஸ்கை என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனதளவில் உற்சாகமடைந்துள்ள அமலாபால், தன்னாலும் விருதுகள் வாங்கும் அளவுக்கு நடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அதன்காரணமாக, இதுவரை கமர்சியல் கதைகளாக நடித்து வந்த அவர், இனி அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.
குறிப்பாக பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணி நடித்தது போன்ற வேடங்கள் கிடைத்தாலும் தைரியமாக நடிப்பாராம். இதுவரை சினிமாவில் ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்தும் முயற்சியில் இருந்தேன். இப்போது அதற்கான பலன் கிடைத்து விட்டது. ஆனால் அடுத்து என்னை உலகுக்கு அடையாளம் காட்டக்கூடிய கதைகளாக தேர்வு செய்யப்போகிறேன். அப்படி கிடைக்கும் படங்களில் உடல் ஊனமுற்றவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன். கதாநாயகி என்ற வட்டத்தில் இருந்து விடுபட்டு, கதை கதாபாத்திரத்திற்கேற்ப மாறி நடிக்கும் நல்ல நடிகையாக என்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளப்போகிறேன் என்கிறார் அமலாபால்.