ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி 16 கோடி ரூபாய் செலவில் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அவரது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது. 3மணி 10 நிமிடமாக இருந்த படத்தின் நீளத்தை 2 மணி 30 நிமிடமாக குறைத்திருந்தார்கள். சில முக்கிய சண்டைக் காட்சிகள், வாங்க பழகலாம் காமெடி காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏவிஎம் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பான சிவாஜி படத்தை புதிய தொழில்நுட்பமான 3டியில் வெளியிட முடிவு செய்து, மிகுந்த பொருட் செலவில் அதை உருவாக்கி, அவரது பிறந்த நாளில் வெளியிட்டோம். எங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் 2 மணி நேரத்திற்கு மேல் இருக்ககூடாது என்ற கட்டாயத்தால் படத்தின் சில காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதை குறைப்பது என்ற சங்கடமான நிலையும் எங்களுக்கு ஏற்பட்டது, அப்படி இருந்தும் படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் உள்ளது. எனவே ரஜினி ரசிகர்கள் வருத்தமடைய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.