Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு ரூ.1.40 கோடி சம்பளம்! சத்தீஸ்கர் மாநிலம் தாராளம்!!

16 டிச, 2012 - 14:28 IST
எழுத்தின் அளவு:

சத்தீஸ்கர் மாநில பிறந்த நாள் விழாவில், 8 நிமிட நடன நிகழ்ச்சிக்காக, பாலிவுட் நடிகை, கரீனா கபூருக்கு, 1.40 கோடி ரூபாய், கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து, 2000 ஆண்டில், தனியாக பிரித்து உருவாக்கப்பட்டது, சத்தீஸ்கர் மாநிலம். வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள், அதிகமுள்ள மாநிலம். பழங்குடியின மக்கள் நிறைந்த இந்த மாநிலத்தில், பாரதிய ஜனதாவை சேர்ந்த, ராமன் சிங் முதல்வராக உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 1ம் தேதி, மாநிலம் உருவாக்கப்பட்டதன் ஆண்டு விழா நடத்தப்படுவது வழக்கம். "ராஜ்யோத்சவம் என்ற இதற்கான நிகழ்ச்சி, இந்த ஆண்டில், கடந்த மாதம், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தலைநகர், ராய்ப்பூரில் விமரிசையாக நடந்தது.அதில், பாலிவுட் நடிகர், நடிகைகள் நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. பாலிவுட் படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், சயீப் அலி கான் என்ற, ஏற்கனவே திருமணம் ஆகி, 16 வயதில் குழந்தைகள் உள்ள நடிகரை, 5 ஆண்டுகளாக காதலித்து, சமீபத்தில் மணந்து கொண்டவருமான, நடிகை கரீனா கபூரும் பங்கேற்றார்.

8 நிமிட நடனம்: ரூ.1.40 கோடி

அவருடைய நடன நிகழ்ச்சி, மொத்தமே, 8 நிமிடங்கள் தான் நடந்தது. அதற்காக, அவருக்கு, ஏராளமான பணம் கொடுக்கப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது. மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ், கலைநிகழ்ச்சிக்கு, எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என, மாநில பொதுப்பணி துறை அமைச்சர், பிரிஜ்மோகன் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து, சட்டசபையில் நேற்று, அமைச்சர், பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்ட பதிலில் கூறியுள்ளதாவது:ஒரு வாரம் நடந்த கலைநிகழ்ச்சிகளில், 245 கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில், 42 பேர், பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். கலை நிகழ்ச்சிக்காக, மொத்தம், 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, பாலிவுட் நடிகை, கரீனா கபூருக்கு, அதிகபட்சமாக, 1.40 கோடி ரூபாய், கவுரவ ஊதியமாக வழங்கப்பட்டது.

சாப்பாட்டுக்கு ரூ.11 லட்சம்

நடிகர் சோனு நிகாமுக்கு, 36 லட்ச ரூபாய், பாடகி, சுனிதி சவுகானுக்கு, 32 லட்ச ரூபாய், நடிகை, தியா மிர்சாவுக்கு 25 லட்ச ரூபாய், நடிகர், ஹிமேஷ் ரெஷாமியாவுக்கு, 24 லட்ச ரூபாய், பாடகர், பங்கஜ் உதாசுக்கு, 90 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.கலைநிகழ்ச்சிக்காக, நடிகர், நடிகைகளை அழைத்து வந்த விதத்தில், 54 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது; அவர்களின் தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றிற்காக, 11 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது.இவ்வாறு, அமைச்சர் அகர்வால், பட்டியல் வாசித்தார்.

"தினமும், 100 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காத, ஏழை மக்கள் நிறைந்த, சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆண்டுதோறும், அரசு கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில், பணத்தை இப்படி கரியாக்கலாமா... என, நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "அன்றாடம் காய்ச்சிகளாக, 90 சதவீத மக்களைக் கொண்டுள்ள மாநிலத்தில், 8 நிமிட நடனத்திற்கு, 1.40 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ள, நடிகை கரீனா கபூருக்குத் தான், வெட்கம் இல்லை; அதைக் கொடுத்த மாநில அரசுக்கு, புத்தி எங்கே போயிற்று... என, பொதுமக்களும் கொதிப்படைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

prasanth - coiambato,இந்தியா
22 டிச, 2012 - 13:07 Report Abuse
 prasanth எல்லாம் தலை விதி....
Rate this:
Raja - madurai,இந்தியா
21 டிச, 2012 - 10:54 Report Abuse
 Raja 8 நிமிடம் அடியா பாட்டுக்கு 1.40 crore government கொடுத்துருக வெலங்கும். இந்தியா வல்லரசா ஆகாது,பணகரர்களுக்கு நல்லரச வான ஆகும்
Rate this:
sri - chennai,இந்தியா
20 டிச, 2012 - 03:29 Report Abuse
 sri சினிமா கதாநாயகர் கதாநாயகிகளின் கருப்பு பணத்தை ஒழிக்க புதிய சட்டம் வர வேண்டும . அதோடு எந்த சினிமாவின் தயாரிப்பு செலவும் மத்திய அரசு நிர்ணயித்த பட்ஜெட்டை தாண்டக்கூடாது என்ற புதிய சட்டமும் வர வேண்டும்.
Rate this:
அருண் - TIRUPUR,இந்தியா
18 டிச, 2012 - 16:35 Report Abuse
 அருண் வேதனை
Rate this:
அனுசுயா - chennai,இந்தியா
17 டிச, 2012 - 17:55 Report Abuse
 அனுசுயா கரீனா ஒரு மனுஷியா???? பாவம் கஷ்ட படுற மக்கள் கிட்ட போய் இவ்ளோ பணம் வாங்க எப்படி தா மனசு வந்துச்சோ. வெட்க கேடு. இது போல நல்லவங்க இருக்குற பூமியில எப்படி மழை வரும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in