விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
வித்தியாசமான பெயருடன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி படத்தின் வி.ஐ.பி. ஷோ சென்னை போர்பிரேம் தியேட்டரில் நடந்தது. படம் திரையிடப்படுவதற்கு முன் மேடையேறிய படத்தின் டைரக்டர் ரவிபாலா, கேரமாமேன் குகன், தயாரிப்பாளர் கே.விமல், ஹீரோ அரவிந்த் வினோத் உள்ளிட்ட அனைவருமே... மனசுல தோன்றியதையெல்லாம் படமாக்கியிருக்கோம். நல்லா வந்திருக்கு. ஹிட் ஆகும்னு நம்பிக்கை இருக்கு. படம் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க என்று மதுரைக்கே உரிய யதார்த்த வார்த்தைகளையே பேசினார்கள். அதன் பின்னர் திரையிடப்பட்ட படத்தை பார்த்த வி.ஐ.பி.,க்கள் படம் முடிந்ததும் மதுரை டூ தேனி படக்குழுவினரிடம் மதுரைக்காரங்க.. மதுரைக்காரங்கதான்யா... ஜெயிச்சிட்டீங்கய்யா...! என்று பாராட்டி விட்டு சென்றனர். படக்குழுவினரின் யதார்த்த வார்த்தைகளைப் போலவே யதார்த்தத்தை நம்பி வந்திருக்கும் மதுரை டூ தேனி படம் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்து விட்டது.