தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"ஐயா படத்தில் நயன்தாராவை அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி, அதே கேரளத்தில் இருந்து, "தாமிரபரணி படத்துக்காக இறக்குமதி செய்த இன்னொரு நடிகைதான் பானு.
அப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்த பானுவுக்கு, சரியான படங்கள் அமையவில்லை. அதனால் ஓரிரு படங்களில் நடித்தவர், பின்னர் மலையாள
படங்களில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு, "சட்டப்படி குற்றம் என்ற படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்த பானு, இப்போது, மேலும் ஒரு படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லும் பானு, "இதுவரை நடித்த படங்களில் இருந்து, இதில் என்னை மாறுபட்ட நடிகையாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அதனால், இதன் பிறகு நல்ல நடிகை என்ற முத்திரை என் மீது விழும் என்கிறார்.