Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி விவகாரம் : தியேட்டர் உரிமையாளர்கள் புது முடிவு

02 செப், 2021 - 11:21 IST
எழுத்தின் அளவு:
Theatre-owners-decision-on-OTT

கொரோனா அலைகளின் காரணமாக தியேட்டர்களைத் தவிர்த்து ஓடிடி தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிடும் முறை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை ஓடிடி தளங்களில் 50 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தை தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான உரிமையை விற்றிருந்தனர். இந்நிலையில் படத்தைத் தியேட்டர்களில் திரையிட அவர்கள் அணுகிய போது அதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தைத் திரையிட மாட்டோம் என்றனர்.

அதற்கான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாகர்கள் எடுத்த முடிவு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஓடிடியில் வெளியான படங்களை பின்னர் தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை, ஓடிடியில் விற்கப்படும் படங்களுக்கு பிரிவியூ காட்சிகளுக்குத் தியேட்டர்களைக் கொடுக்க மாட்டோம், தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவோம் என அவர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், ஓடிடிக்கென தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்களாம்.

இதனால், 'தலைவி' படம் தியேட்டர்களில் வெளியாக முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படத்தை இரண்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுவதற்கான உரிமையை ஏற்கெனவே விற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமலாக்கப் பிரிவு விசாரணையில் நடிகை சார்மிஅமலாக்கப் பிரிவு விசாரணையில் நடிகை ... ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பும் அஜித் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

KUMAR. S - GUJARAT ,இந்தியா
03 செப், 2021 - 10:53 Report Abuse
KUMAR. S சினிமா படங்களை ஓ.டீ.டீ மற்றும் தொலைக்காட்சிக்கு தருவதை நிறுத்திக்கொள்ளுங்கள். எத்தனை சேனல்கள் மூடப்படும் என்பது தெரியும்..மக்கள் மீண்டும் அரங்குக்கு வரும் பழக்கம் அதிகரிக்கும்.
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
03 செப், 2021 - 10:11 Report Abuse
vbs manian அமெரிக்காவில் ஹாலிவுட் படங்கள் ஓடிடி பிரச்சினையால் பாதிக்க பட்டதாக தெரியவில்லை. அது எப்படி என்று தெரிந்து கொண்டு கடைபிடிக்கலாம்.
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
03 செப், 2021 - 09:04 Report Abuse
Bala Murugan எல்லா படங்களையும் ஓடிடி யில் வெளியிட்டு திரையரங்கில் வெளியிடாமல் இருந்தால் ஓடிடி பதிவு பண்ணி வைத்திருப்பவர்கள் மட்டும் தான் புதிய படங்களை பார்க்க முடியும். மற்றபடி தொலைக்காட்சியில் காண்பித்தாள் பார்க்கலாம்.முதலில் திரையரங்குகளில் வெளியிட வேண்டும். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து ஓடிடி யிலும் தொலைக்காட்சியிலும் வெளியிட வேண்டும். இப்படி இருந்தால் எல்லோருக்கும் ஞாயமாக இருக்கும்.
Rate this:
Dharma - Madurai,இந்தியா
03 செப், 2021 - 07:38 Report Abuse
Dharma சினிமா, கிரிக்கெட், டாஸ்மாக் இம்மூன்றும் ஒழிந்தால்தான் நாடு முன்னேறும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in