Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது

25 ஆக, 2021 - 01:20 IST
எழுத்தின் அளவு:
cheating-case-against-Arya;-Two-arrested

சென்னை : நடிகர் ஆர்யா போல நடித்து, திருமண ஆசை காட்டி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் 70.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் குடியுரிமை பெற்று வசிப்பவர் வத்ஜா. இலங்கை பெண்ணான இவர், சில மாதத்திற்கு முன், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, மின்னஞ்சலில் ஒரு புகார் அளித்தார்.


அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ஆர்யா என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 70.40 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார். இது அவரது தாய்க்கும் தெரியும். இருவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


இந்த புகார், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த மோசடி குறித்து, நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் 1:30 மணி நேரத்திற்கு மேல் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.


விசாரணையில் சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், 29, என்பவர், ஆர்யா போல நடித்து, வாட்ஸ் ஆப் வாயிலாக வத்ஜாவுக்கு காதல் வலை வீசியுள்ளார். பின், திருமணம் செய்வதாக 70.40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததும், இதற்கு அவரது மைத்துனர் முகமது ஷூசைனி, 35, என்பவர் துணையாக இருந்ததும் தெரிந்தது.


இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த முகமது ஷூசைனி, முகமது அர்மான் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கமலின் தேவர்மகன் 2 உருவாகிறதுகமலின் தேவர்மகன் 2 உருவாகிறது தலைவி - எம்ஜிஆர், கருணாநிதி கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் ? தலைவி - எம்ஜிஆர், கருணாநிதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Shekar - Mumbai,இந்தியா
25 ஆக, 2021 - 11:15 Report Abuse
Shekar அந்த பெண் ஒரு வீடியோ கால் கூட பேசலியா, அப்படி இல்லாமலா போன்ல ஆர்யா அப்படின்னு சொன்ன உடனே பணம் அனுப்பினார். காசர்கோடு ஆட்கள் யானையை பூனை ஆக்குவதில் வல்லவர்கள். உலகில் உள்ள அணைத்து செய்யக்கூடாத காரியங்களை செய்பவர்கள். ஆர்யா தம்பியோட சொந்த ஊர் காசர்கோடு
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25 ஆக, 2021 - 10:17 Report Abuse
அசோக்ராஜ் அம்மாவாக நடித்தவர் கைதாகவில்லையா?
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
25 ஆக, 2021 - 09:55 Report Abuse
சொல்லின் செல்வன் இவனுங்க ரெண்டு பேரு மூஞ்சிய எந்த ஏங்கில் ல பாத்தாலும் ஆர்யா மாதிரி இல்லையே. அந்த பொண்ணு எப்படி ஏமாந்துச்சு
Rate this:
Shankar G - kuwait,குவைத்
25 ஆக, 2021 - 09:42 Report Abuse
Shankar G பணம் பத்தும் செய்யும் .. என்ன உள் குத்தோ ????
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
25 ஆக, 2021 - 08:26 Report Abuse
mei இப்படி என்ன அந்த பொண்ணுக்கு மோகம்? கேவலம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in