ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
"நன்றாக தமிழ் பேச தெரிந்தவர். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலச்சந்தரின் "பொய் படம் மூலம் அறிமுகமானவர் இப்படி, பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான, விமலா ராமன், இப்போதும், மலையாளம், இந்தி படங்களில் தொடர்ந்து, "பிசியாக நடித்து வருகிறார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...
* தமிழ் படங்களில் மிக பெரிய கேப் இருக்கே?
தமிழ் படங்களில் கொஞ்சம் கேப் இருக்கு, ஆனா மலையாளம் தெலுங்கு, இந்தியில் கோவிந்தா, சுனில் ஷெட்டியுடன் ஒரு படம், சச்சின் ஜோஷியின் மும்பை மிரர், போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கேன். சரியான கதை அமைந்தால் கண்டிப்பா தொடர்ந்து தமிழ் படம் பண்ணும் ஆர்வம் இருக்கு.
* நல்லா தமிழ் பேசும் நடிகை, நிறைய படங்கள் பண்ணாம கோடம்பாக்கத்தை மிஸ் பண்றிங்களா?
நிச்சயமா, நீங்க சொன்ன மாதிரி தமிழ் பேச தெரிந்த தமிழ் பொண்ணு நான், என் அம்மா எல்லாரும் சென்னைதான் பிறப்பிடம். அதனால் எனக்கு தமிழ் படங்கள் மேல கொஞ்சம் ஆர்வம் இருக்கு. அதேசமயம் எல்லா மொழிகளிலும் சிறந்த நடிகையாக பேர் எடுக்க ஆசை இருக்கு. காரணம் நம்ம நாட்டில் எத்தனை மொழி இருக்கு, எத்தனை சினிமா இண்டஸ்ட்ரி இருக்கு, அத்தனை மொழியிலும் சினிமா பண்றவங்க இருக்காங்க. அதனால் அத்தனை மொழிகளையும் விமலா ஒரு சிறந்த நடிகை என்ற பேர் எடுக்கவே ஆசைப்படுகிறேன். இப்ப நிறைய நல்ல கதைகள் தமிழ் சினிமாவுல வருது. என் கவனமும் கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கு பார்க்கலாம்.
* உங்க ட்ரீம் ஹீரோ யார்?
சிட்னியில நான் பிறந்து வளர்ந்தாலும், நிறைய தமிழ் படங்கள் பார்த்து வளர்ந்து இருக்கேன். இந்திய சினிமா என்பதற்கு கமல்-ரஜினி படங்கள் அடையாளமாக இருந்திருக்கு, ரெண்டு போரையும் எனக்கு பிடிக்கும், இந்தியில் ஷாருகான், சல்மான் இவர்களை பிடிக்கும். இப்ப உள்ள தமிழ் நடிகர்கள் எல்லாரும் ரொம்ப டேலண்டா இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு திறமை இருக்கு. டான்ஸ், காமெடி, ஆக்ஷ்ன் இப்படி எல்லாவற்றிலும் பின்றாங்க. அதனால அவங்க கூட நானும் ஒரு பார்ட்டா இருக்கவே ஆசைப்படுகிறேன்.
* நீங்க நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது?
எப்பவும் எனக்கு வரலாற்று படங்கள், கதைகள் ரொம்ப பிடிக்கும். ஜோதா அக்பர் மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கு. பல வருஷம் பரத நாட்டியம் கற்றிருக்கேன், ஸோ நல்ல டான்ஸ் படங்கள் பண்ணனும். கன்னட படம் ஆப்த ரட்ஷகா படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சந்தோஷம், ஆனா இன்னும் என் கனவுப்படங்கள் ரோல் நிறைய இருக்கு.
* உங்களுக்கு எத்தனை மொழிகள் பேச தெரியும்?
தமிழ், தெலுங்கு, அங்கிலம், மலையாளம், இந்தி என இப்படி நிறைய மொழிகள் தெரியும். அப்ப அப்ப படங்களில் நடிக்கும் போது அந்த மொழிகளை கற்றுக்கொள்வேன். எனக்கு இப்ப தெலுங்கு படங்களில் நடிக்க ஈஸியா இருக்கு, ஏன்னா குறைந்த டைம்ல நிறைய படங்களில் நடித்துவிட்டேன். எல்லோரும் ரொம்ப பிரண்ட்லியான டைப். தமிழில் கூட கொஞ்சம் பிரண்ட்ஸ் இருக்காங்க.
* மற்ற மொழி படங்களில் நிறைய நடிக்கிறீங்க? இனி தமிழ் மொழி படங்களில் உங்களை பார்கலாமா?
நிச்சயமா, 2013-இல் பாருங்க. தமிழில் ஒரு ரவுண்டு வரப் போறேன். நிறைய கதைகள் கேட்க தொடங்கி இருக்கேன். இப்போ நிறைய புது இயக்குனர்கள் வராங்க. நிறைய திறமைகள் இருக்கு. ஒரு புதிய களத்தை நோக்கி தமிழ் சினிமா போய் கொண்டு இருக்கிறது. எனக்கும் கொஞ்சம் ஸ்பெஷல் படங்கள் பண்ணனும் என்ற ஆசை இப்போது அதிகமாக வந்திருக்கு. பார்க்கலாம், நீங்களும் எனக்காக கடவுள்கிட்ட வேண்டி கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்தார் விமலா