Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரஜினியின் சிவாஜி 3டி: ஒரு சிறப்பு கண்ணோட்டம்

12 டிச, 2012 - 14:28 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படங்களில் ஒன்றான சிவாஜி இன்று(12.12.12) முதல் அவர் ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் பரிசாக 3டி தொழில்நுட்டபத்தில் வெளிவருகிறது. அது பற்றிய ஒரு கண்ணோட்டம்.

* சிவாஜியை 3டி தொழில்நுட்பத்திற்கு மாற்ற 18 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 2 வருடங்களாக 400 கம்ப்யூட்டர் நிபுணர்கள் தினமும் மூன்று ஷிப்டுகளாக பணியாற்றி இதை உருவாக்கி உள்ளனர்.

* படத்தை முன்பை விட விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 3 மணி 10  நிமிடமாக இருந்த படத்தின் நீளத்தை 2 மணி 30 நிமிடமாக குறைத்துள்ளனர். குறிப்பாக ஸ்ரேயா வேலை செய்யும் மியூசிக் கடை சண்டை காட்சி நீக்கப்பட்டுள்ளது. சாலமன் பாப்பையா பகுதியான "வாங்க பழகலாம்" பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து சண்டைக் காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

* பாடல் காட்சிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் 3டியில் மிரட்டலாக இருக்கிறது. ரஜினியின் கண்கள்கூட நடிப்பதை மிக அருகில் பார்க்க முடிகிறது.

*ரஜினி தூக்கி எறியும் மலர், ஆப்பிள் நம்மீது வந்து விழுவது போன்ற பிரமிப்பும், கிளைமாக்ஸ் காட்சியில் பறக்கும் ரூபாய் நோட்டுகள் தியேட்டர் முழுவதும் பரவும் பிரமிப்பும் 3டி வழங்கிய கொடை.

*மொட்டை பாசுக்கு மொத்தம் மூன்றே காட்சிகள்தான். ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவார். அடுத்து மேடையில் பேசுவார், பிறகு கிளைமாக்ஸ் சண்டைக்கு போய்விடுவார். பரபரவென செல்லும் மொட்டை பாஸ் பகுதி.

*ஸ்ரேயாவின் மொத்த அழகையும் பக்கத்தில் வைத்து பார்க்கும் அனுபவம் அலாதியானதாக இருக்கும்.

* பட...பட... ஸ்டைல் பாட்டு ஒன்ஸ் மோர் கேட்க வைக்கும்.

* ஒரே ஒரு குறையும் உண்டு. ரஜினியின் குளோஸ்-அப் காட்சிகளில் அவர் போட்டிருக்கும் மேக்-அப் தூக்கலாகத் தெரியும்.

* மற்றபடி சிவாஜிராவ் தன் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு இந்த சிவாஜி என்பது 100 சதவிகிதம் உண்மையானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in