Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள்! சிம்பு வேதனை!!

11 டிச, 2012 - 15:37 IST
எழுத்தின் அளவு:

உண்மையை சொல்வதால் என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள் என்று நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். டைரக்டர் ராம நாராயணன், நடிகர் சந்தானம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா. புதுமுகம் சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விஷாகா சிங் நடிக்கின்றனர். கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், சமீபகாலமாக விழாக்களை தவிர்த்து விடுகிறேன். மேடையில் உண்மையை பேசுகிறேன். அது வேறுவிதமாக பரவுகிறது. என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள். உண்மையை சொல்வதால் திமிர் பிடித்தவன் என்றால் சொல்லிக்கொண்டு போகட்டும். மன்மதன் படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். கல்லூரி காட்சியில் என்னுடன் நடிக்க நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார். பிரபலமான காமெடியனை போடும்படி இணை இயக்குனர் கூறினார். சந்தானத்தை அறிமுகப்படுத்தலாம் என்றேன். உடனே அந்த இணை இயக்குனர், உனக்கு அறிவிருக்கா என்றார். ஆனாலும் சந்தானத்தைதான் போட வேண்டும் என்றதுடன், இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்பீர்கள் என்றேன். அது உண்மையானது. அந்த இணை இயக்குனர் ஒரு படம் இயக்கினார். அதில் சந்தானம் நடித்தார், என்றார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் சிம்பு ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

பயில்வான் - mdu,இந்தியா
12 டிச, 2012 - 15:49 Report Abuse
 பயில்வான் நா நல்லவன், எந்த கண்பியுசன் இல்லாதவன் , வல்லவன் ...... அப்டின்னு இவுரு போடா போடி படத்துல இவுர பத்தியே ரொம்ப பெருமையா பாடுவாராம் .....
Rate this:
ரசிகன் - tamilnadu,இந்தியா
12 டிச, 2012 - 10:12 Report Abuse
 ரசிகன் நீ சினிமால இனிமே நடிக்காத ..
Rate this:
கிர - Chennai,இந்தியா
12 டிச, 2012 - 06:06 Report Abuse
 கிர Mr. Mokkaiyan, its Jodi season and not manada mayelada...
Rate this:
selvam - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
11 டிச, 2012 - 20:38 Report Abuse
selvam நீங்க வருத்தபடாதி்ங்க எப்பவும் போலவே இருங்க
Rate this:
மொக்கையன் - thoonganagaram ,இந்தியா
11 டிச, 2012 - 18:07 Report Abuse
 மொக்கையன் எனக்கு நடிக்க தெரியாதுய்யா ! தெரியாது ! மானாட மயிலாட நீங்க பண்ண அலப்பறை ... யப்பா...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in