Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவி ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து

10 ஆக, 2021 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-wishes-Raadhika

நடிகை ராதிகா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகத்தில் 43 ஆண்டுகள் இடைவிடாமல் ஒரு பெண் நடித்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல. ராதிகாவின் 43 வருட திரையுலகப் பயணத்திற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா,” எனப் பாராட்டியுள்ளார்.

ராதிகாவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
10 வருட போராட்டம், 11 ஆபரேஷன் : மரண விடுதலை அடைந்தார் சரண்யா சசி10 வருட போராட்டம், 11 ஆபரேஷன் : மரண ... கடற்படை தளபதியாக நடிக்கும் ரகுமான் கடற்படை தளபதியாக நடிக்கும் ரகுமான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
13 ஆக, 2021 - 13:28 Report Abuse
Bhaskaran சாதனை வாழ்த்துக்கள் மேடம்
Rate this:
Girija - Chennai,இந்தியா
10 ஆக, 2021 - 19:20 Report Abuse
Girija செக் மேட்டர் என்ன ஆச்சு ?
Rate this:
ppmkoilraj - erode.10,இந்தியா
10 ஆக, 2021 - 16:03 Report Abuse
ppmkoilraj ராதிகா ஒரு நடிகையர் திலகம் என்றே கூறலாம் காரணம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி மிகை நடிப்பு இன்றி யதார்த்த நடிப்புக்கு வந்து விடும் அற்புதமான நடிகை அவர் அவருடைய தொடர் என்பதால்தான் சித்தி தொடரை எங்களால் ரசிக்க முடிகிறது மேலும் அவர் இதில் இல்லாமல் வெளிநாடு சென்றது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் திரும்பி வந்து மீண்டும் தொடரில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறோம் அவரது நடிப்பை மீண்டும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in