Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கும்கியைக் கண்டு பயப்படுகிறார் கெளதம்மேனன்!

10 டிச, 2012 - 15:00 IST
எழுத்தின் அளவு:

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கெளதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் தோல்வியடைந்து விட்டதால், அடுத்தபடியாக தான் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் பட விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறார் கெளதம். ஏற்கனவே ஜீவா நடித்த முகமூடி தோல்வியடைந்து அவரது மார்க்கெட்டும் சரிந்திருப்பதால், தான் இந்த படத்தை வெளியிடும் நேரத்தில் போட்டி ஏதும்இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். அதற்காக போட்டி இல்லாத களமாக டிசம்பர் 14-ம் தேதியை தேர்ந்தெடுத்திருந்தார்.

ஆனால் இப்போது பார்த்தால், நீதானே என் பொன்வசந்தம் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவெடுத்துள்ள அதே 14-ம் தேதியில் கும்கி படத்தையும் வெளியிடுகிறார்களாம். மைனா பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் என்பதோடு, இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் இருப்பதால், எங்கு இந்த படத்தினால் தனது படம் தோற்று விடுமோ என்று பயப்படுகிறார் அவர். ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடலாமா? என்று யோசித்தாலும், கும்கிக்காக தான் பின்வாங்கினால், தனது படத்தை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திக திக் மனநிலையுடன் இருந்து வருகிறார் கெளதம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

வா. ஸ்ரீனிவாசன் - chennai,இந்தியா
15 டிச, 2012 - 20:06 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் கெளதம் மேனன் சிறந்த படைப்பாளி அவர் நிச்சயமாக பயம் கொள்ள மாட்டார். துணைக்கு இசைஞானி வேறு இருக்கிறார். வெற்றி நிச்சயம். ஒரே நேரத்தில் இரண்டு படமும் வெற்றி பெறக் கூடாத. கும்கியும் வெற்றி பெரும். நடிகர்த்திலகத்தின் பேரனும் இளைய திலகத்தின் மகனுமான விக்ரம் பிரபு வெற்றி வாகை சூடி குல 'கொரவம்' காக்க வாழ்த்துக்கள்.
Rate this:
நாய் சேகர் - thiruchi,இந்தியா
11 டிச, 2012 - 15:29 Report Abuse
 நாய் சேகர் கௌதம் மேனன் மீது தினமலருக்கு என்ன பயம் ?
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
11 டிச, 2012 - 04:41 Report Abuse
 பாண்டி கும்கி கௌதமன சட்னி பண்ணிடுவான் போல இருக்கு. இப்பவே டைரக்டர் டூ பாத்ரூம் வர்ற மாதிரி பயப்படுறாரு.
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
11 டிச, 2012 - 02:10 Report Abuse
Neelaa ஆமாம், கௌதம் மேனன் இந்த நிருபர் கிட்ட தான் சொல்லி அழுதாராம்! எப்படி எல்லாம் 'செய்தி' ங்கிற பெயரில் இப்படி எழுதறாங்களோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in