Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் : பால்காரர் வரிகட்டும்போது நடிகர் கட்டக்கூடாதா? என கேள்வி

05 ஆக, 2021 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Entrance-tax-exemption-case-:-HC-slams-Dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரிவிலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது. வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டதாகவும் பாக்கி வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார். ஆனால் மனுவில் மனுதாரர் தான் யார் என்பதையும் தனது தொழிலையும் குறிப்பிடவில்லை. அவரது ஆண்டு வருமானமும் குறிப்பிடப்படவில்லை. ஏன் இதை மறைக்க வேண்டும்? பணியையோ தொழிலையோ குறிப்பிடுவது அவசியம் இல்லையா? ஏற்கனவே நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019ஆம் ஆண்டே தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நுழைவு வரியை செலுத்தாமல் இருக்க உள்நோக்கம் என்ன? வரி செலுத்தக்கூடாது என்று தானே? மக்களிடம் வசூலிக்கும் வரியில் போடப்பட்ட சாலையை தானே மனுதாரர் இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்துகிறார்? தன்னுடைய மோட்டார் சைக்கிளை வைத்து பால் வியாபாரம் செய்யும் பால்காரர் அந்த வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு ஜிஎஸ்டி வரி கட்டுகிறார். அவர் தன்னால் பெட்ரோலுக்கு வரி கட்ட முடியவில்லை என்று வழக்கு தொடர்வதில்லை. ஏழைகள் முறையாக வரி செலுத்துகிறார்கள். பணக்காரர்களும் பிரபலங்களும் தான் தங்கள் வரியை செலுத்துவதில்லை. விலக்கு கேட்கிறார்கள். மனுதாரர் தானே உணர்ந்து வரியை செலுத்தி இருக்கவேண்டும்.

நீங்கள் எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் அவற்றுக்கான வரியை செலுத்துங்கள். இந்த வழக்கை மதியம் 2.15 மணிக்கு தள்ளி வைக்கிறேன். தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் அதற்குள் மனுதாரர் கட்டவேண்டிய பாக்கி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும். மனுதாரர் அந்த தொகையை செலுத்த உத்தரவிடப்படும்.'. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

இதே நீதிபதி தான் சொகுசு காருக்கு நுழைவு வரி கேட்ட நடிகர் விஜய்யின் வழக்கில் விஜய்யை கடுமையாக விமர்சித்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பில் விபத்து - சேரனுக்கு காயம் படப்பிடிப்பில் விபத்து - சேரனுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
09 ஆக, 2021 - 02:06 Report Abuse
thonipuramVijay மிக சிறந்த தீர்ப்பு தனுஷ் பேசாமல் தூக்கு மாட்டி ..... சொகுசு காருக்கு முழு பணம் செலுத்து வாங்க தெரியுது ...அனால் அதற்க்கு வரி காட்ட சொன்னால் வலிக்குது ....வரி கூட கட்ட முடியாதவனுக்கு எதற்கு சொகுசு கார் ?? அப்படி கவர்மெண்ட் கிட்ட பிச்சை எடுத்து என்ன ..... துக்கு சொகுசு கார் ? உங்களுக்கு வரி வரி விளக்கு கொடுத்து ..காரின் முன்னாள் ...வரி காட்ட முடியாமல் விளக்கு அளிக்கப்பட்ட கார் என்று எழுத சொன்னால் ??? இன்னொனன்று ..எடுப்பது பிச்சை அதில் தொழில் அட்ரஸ் டீடெயில்ஸ் எதுவும் இல்லாமல் வேறு ...அட த்தூ
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
06 ஆக, 2021 - 18:05 Report Abuse
Guna Gkrv சட்டத்தை ஒரே மாதிரி போடுங்க இம்போர்ட் கார் நுழைவு வரி செலுத்தி தான் ஆகவேண்டும் என்று, கோர்ட் சும்மா தடை உத்தரவு பிறப்பிக்க கூடாது அதனால் ஒரே சட்டம் இம்போர்ட் கார் நுழைவு வரி கட்டாயம் அது யாராக இருந்தாலும், நடிகர்கள் தான் உழைக்காமல் சம்பளம் வாங்குபவர்கள்,நடிகர்கள் கரும்பு திங்க கூலி கொடுப்பவர்கள் நம்ம தயாரிப்பாளர்கள் அதனால் இந்த வழக்குகளில் எந்த கருணையும் காட்ட கூடாது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
06 ஆக, 2021 - 04:06 Report Abuse
meenakshisundaram இவனுங்க தான் இன்னிக்கு தமிழனின் ஒட்டு மொத்த அடையாளம் அடுத்தது விஜய் சேது பதியா ? இல்லே உதவா நீ தியா ?இவனுங்களுக்கு இந்தியா தயாரித்த கார்கள் போதை வில்லையா ?
Rate this:
பாலா - chennai,இந்தியா
06 ஆக, 2021 - 13:02Report Abuse
பாலாநீங்க கேக்கறது கரேட்டு ஆனா ஒரு அந்தஸ்த்து வேனுமுல்லோ இப்பேல்லாம் ஐடீ கம்பேனியில வேல பார்க்கறவன் கூட பென்ஸ் கார்ல போறானுவோ நா அந்த வண்டியில போனா என் மருவாத என்னவறது அந்தஸ்து ஜர்க் ஆகாதா அதுக்கு தான் rolls-royce வாங்குனேன் அதுக்கு இம்புட்டு போங்குனா எப்படி...
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
05 ஆக, 2021 - 16:55 Report Abuse
DVRR என்ன வேலை என்றால் நடிகன் என்றால் அந்த வழக்கை உடனே டிஸ்மிஸ் செய்து விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம். அது என்ன விஜய் மட்டும் செய்வது நானும் செய்கின்றேன் என்று தனுஷ் செய்வது போல இருக்கின்றது. இதுக்கு ஒரே மாற்று வழி சச்சின் டெண்டுல்கர் வழி ஒன்று தான் Gift. Gift கொடுப்பவர் எல்லா வரியையும் கட்டி உங்களிடம் காரை கொடுத்து விடுவார். ஆகவே தயாரிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள் அவர் செய்து விடுவார் உங்களுக்கு எதை பற்றியும் கவலையில்லை.. என்ன தனுஷ், விஜய் நல்லா புரிஞ்சுதா???/
Rate this:
mohan - chennai,இந்தியா
06 ஆக, 2021 - 17:23Report Abuse
mohanஇவங்க ரெண்டு விஜய் / தனுஷ் பெரும் கோடி கோடி சம்பாதிச்சாலும் வரி கட்டணுமா கேப்பாங்க ஒரு லட்சம் வரிக்கு மேலே முறையீடு செய்ஞ்சு வாங்கிலுக்கு பாத்து லச்சம் பீஸ் கொடுக்குற ஆதி மேதாவீங்க சரியான சுயநலவாதிகள் ?...
Rate this:
Kannan rajagopalan - Chennai,இந்தியா
05 ஆக, 2021 - 14:42 Report Abuse
Kannan rajagopalan இதை மக்களிடம் கொண்டு சென்று இன்னொரு அரசியல் கட்சி உதயம் ஆக்காமலிருந்தா சரி . வாழ்க நீதிபதி ...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in