Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா!!

09 டிச, 2012 - 17:34 IST
எழுத்தின் அளவு:

திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பொரும்பாலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை. அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கும். ஆனால் நடிகை சினேகாவுக்கு தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹரிதாஸ் படத்தில் ஹீரோயின் வாய்ப்பை தொடர்ந்து இப்போது பிரகாஷ்ராஜின் படத்திலும் சினேகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. தோணி படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ் இயக்கி, நடிக்கவுள்ள படம் "உன் சமையல் அறையில்". மலையாளத்தில் வெளியான "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தான் தமிழில் "உன் சமையல் அறையில்" என்று ரீமேக் செய்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தபடத்தில் பிரகாஷ்ராஜ்க்கு ஜோடி சினேகாதான். இவரோடு பாலிவுட் நடிகை தபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பிரகாஷ்ராஜ் படத்தில் நடிப்பது பற்றி சினேகா கூறியுள்ளதாவது, பிரகாஷ்ராஜ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு உள்ளேன். முன்பை போல பிஸி நடிகையாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து சினிமா பீல்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறேன். பெரிதும் இடைவெளி விடாமல் நான் படங்கள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் நான் நடித்துள்ள ஹரிதாஸ் படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் டீச்சராக நடித்துள்ளேன். என்னுடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக ஹரிதாஸ் படம் அமையும் என்று கூறியுள்ளார். மேலும் தனது திருமண வாழ்க்கை பற்றி கூறும்போது, திருமண வாழ்க்கை நன்றாக போய்கொண்டு இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு எனக்கு சமைக்க தெரியாது, ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

selvakumar dubai uae - deira dubai nakkeel road,இந்தியா
10 டிச, 2012 - 11:31 Report Abuse
 selvakumar dubai uae ஹாய் சிநேக ஹொவ் ஆர் யு நான் உன்னை நினைக்கிறேன்
Rate this:
சுதா - chennai,இந்தியா
10 டிச, 2012 - 10:43 Report Abuse
 சுதா மவுசு குறையாத சரக்கு இதுப்பா. செம கட்டை.
Rate this:
மகம் - usa ,யூ.எஸ்.ஏ
10 டிச, 2012 - 09:21 Report Abuse
 மகம் ஸ்னேஹா கண்ணு, பேசாம புருஷன் கூட நல்ல வாழ்க்கை நடத்து. செல்லம் கிட்ட மாட்டினா மேட்டர் கதை தான். ஏம்மா உனக்கு இந்த வேலை.
Rate this:
பாண்டி - Madurai,இந்தியா
10 டிச, 2012 - 00:06 Report Abuse
 பாண்டி அட ரிடையர்மென்ட்டு கேசு
Rate this:
nike - karaikal  ( Posted via: Dinamalar Android App )
09 டிச, 2012 - 23:20 Report Abuse
nike anjel always anjel
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in